???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கத்தி படத்தின் கதை.?

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2014  01:16:06 IST

 
    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளர் பற்றி பரபரப்பாக ஒருபக்கம் பேசப்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில் மிகவும் இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்ட அந்தப்படத்தின் கதை பற்றிய தகவல்களும் கசிந்திருக்கின்றன. இந்தப்படத்தில் விஜய் இரண்டுவேடங்களில் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே வெளியான செய்திதான். வழக்கம்போல ஒரு விஜய் ரொம்ப நல்லவர். இன்னொரு விஜய் கெட்டவர். கோகோ கோலா போன்ற ஒரு பெரிய குளிர்பான நிறுவனத்துக்கு நிறையஇடமும் வரையறையின்றி தண்ணீர் எடுத்துக்கொள்ளும் உரிமையையும் அரசாங்கம் கொடுத்துவிடுகிறது£ம். சம்பந்தப்பட்ட ஊர் மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி அரசாங்கம் இதைச் செய்கிறதாம். அதை எதிர்த்து ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துகிறாராம் நல்லவர் விஜய். அந்தப்போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே திடீரென அவர் காணாமல் போய்விடுகிறார். அந்த நேரத்தில் எதேச்சையாக அந்த ஊர் மக்கள் கண்கணில் கெட்ட விஜய் படுகிறார். அவரை அழைத்து வந்து தெய்வம்போலக் கொண்டாடுகிறது ஊர். அதைக்கண்டு நெகிழும் கெட்டவர், நடந்த விசயங்களைத் தெரிந்து கொண்டு மக்களுக்காகப் போராடத் தயாராகிறார். மீண்டும் போராட்டக்களம் சூடு பிடிக்கிற நேரத்தில் நல்லவர் திரும்பி வருகிறார். அவர் வந்து பார்க்கும் நேரத்தில் தன்னைப்போலவே ஒருவன் இருப்பதையும் அவன் போராட்டத்தையும் முன்னெடுப்பது கண்டு இவன்யார்? இவன் எப்படி வந்தான்? நல்லவனா? கெட்வனா? என்று தெரியாமல் குழம்புகிறார். அதன்பின்னர் இரண்டு விஜய்களும் சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கிறது? என்பதும் அரசுக்கெதிரான போராட்டத்தின் முடிவென்ன? என்பதும்தான் படமாம். நிலத்தடிநீரைப்பாதுகாக்க வேண்டும் என்கிற செய்தியைத்தான் இந்தப்படத்தின் மூலம் நாட்டுமக்களுக்குச் சொல்ல வருகிறார்களாம். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...