???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

53 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட காசிமேடு மீனவர் மீண்டும் மியான்மரில் மாயம்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   23 , 2020  03:32:45 IST


Andhimazhai Image

மியான்மரில் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்களில் ஒருவர் அங்கு மீண்டும் காணாமல்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட மீனவர்கள் கொரோனா அச்சம் காரணமாக மியான்மர் கடற்படையினர் கண்காணிப்பில் படகிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது மியான்மர் நாட்டு படகு ஒன்று கடலில் சிக்கியதால் அதை மீட்க உதவிக்காக காசிமேடு மீனவர்களையும் மியான்மர் கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது சென்னை திருச்சினாக்குப்பத்தை சேர்ந்த பாபு என்கிற 35 வயது மீனவர் கடலில் மூழ்கி காணாமல்போனதாக அவரது குடும்பத்தினருக்கு மற்ற மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரும் போராட்டங்களுக்கு பிறகு 53 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவர் மீண்டும் இவ்வாறு மாயமாகியிருப்பது குறித்து தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், "53 நாட்கள் கடலில் தத்தளித்து இருந்த 9 பேரும் உயிருடன் இருப்பதாக வந்த செய்தியும் புகைப்படங்களும் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், மீனவர்கள் மியான்மர் கடல் பகுதியில் மீட்கப்பட்டு இன்றோடு 9 நாட்கள் நிறைவடைந்தும் அவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட வில்லை.

அதனினும் துயரகரமானது அவர்கள் கடற்பகுதியில் படகிலேயே மியான்மர் கடற்படை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. மியான்மர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கடலில் ஏதோவொரு வேலையைச் செய்வதற்காக படகு ஓட்டுநரையும் கடலோடி பாபுவையும் அழைத்துச் சென்றதாகவும், அதிலிருந்து கடலோடி பாபு திரும்பி வரவில்லை என்றும் அவரை மியான்மர் கடற்படை கடலில் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி வருகிறது.

இது பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கும் எங்களுக்கும் பேரதிர்ச்சியைத் தருகிறது. தங்களுடைய முயற்சியால்தான் மீனவர்கள் மீட்கப்பட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்களை மியான்மரில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும்பொருட்டு எத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து இருந்த இந்தியாவின் குடிமக்கள் விமானம் மூலம் மீட்டுவரப்பட்டதை ஒரு சாதனைபோல மார்தட்டிக் கொள்கிறது நடுவண் அரசு. ஆனால், மியான்மர் கடற்கரையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்கு ’வந்தே பாரத்’ திட்டத்தைப் பயன்படுத்துவதில் தடையென்ன? ஒரு சிறப்பு விமானத்தைப் பயன்படுத்தி இதுவரை அவர்களை சென்னைக்கு அழைத்து வராதது ஏன்?

இந்த விசயத்தில் மாநில அரசு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகியவை ஒத்திசைவுடனும் உணர்வுபூர்வமாகவும் செயல்படத் தவறியதால்தான் மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

9 மீனவர்களில் ஒருவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படிருக்குமோ என்ற ஐயத்தை உடனடியாக தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். 9 மீனவர்களையும் பாதுகாப்பாக சென்னை மீட்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டிருக்கிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...