???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மேலும் 2 எம்.பி.க்களுக்கு கொரோனா 0 இருமொழி கொள்கை குறித்த அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   08 , 2019  22:14:41 IST

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன. எனினும் இணையதள சேவை இன்னும் வழங்கப்படாததுடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவழி அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனநாயக கட்சி எம்.பி.யான பிரமிளா, குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் வாட்கின்ஸ் எம்.பி.யுடன் சேர்ந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் போராடுபவர்களுக்கு எதிராக அதிக படைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், அனைத்து மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தடுப்புக்காவலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு போடும் விதிமுறைகளுக்கும் அந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானம் மிகவும் எளிமையானது என்றும், இது செனட் சபைக்கு அனுப்பப்படாது எனவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர். மேலும் இதன் மீது வாக்கெடுப்பும் நடத்த முடியாது. முன்னதாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யக்கூடாது எனக்கோரி பிரமிளாவின் வீட்டு முன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-மெயில்களும் அனுப்பப்பட்டன. எம்.பி. பிரமிளா ஜெயபால், சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...