???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜி.எஸ்.டி. வரி : கோடிக்கணக்கில் வெளிநாட்டு ஆர்டர்களை இழந்த கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள்.

Posted : புதன்கிழமை,   ஜுலை   12 , 2017  05:51:51 IST


Andhimazhai Image

கடந்த ஜூலை 1 நள்ளிரவில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி ஜவுளித்துறை சார்ந்தவர்களைப் பாடாய்படுத்துகிறது.

 

ஜவுளி  ஏற்றுமதியாளர்கள் நேரடி வரிவிதிப்பில் இருந்து தப்பித்து கொண்டனர் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. அது உண்மை என்றாலும் நேரடி தாக்குதலில் இருந்து தப்பிக் கொரில்லாத்  தாக்குதலில் சிக்கி நிலை குலைந்து போய் இருப்பதே நிதர்சனமாகும்.

 

வீட்டு உபயோக ஜவுளியில் புகழ்பெற்ற கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நூல் விலை ஏற்றத்தாலும், ஜி.எஸ்.டி.யாலும் வெளிநாட்டு ஆர்டர்களை பெறமுடியாமலும், கிடைத்த ஆர்டர்களை முடிக்க முடியாமலும் திக்குமுக்காடி நிற்கின்றனர்.

 

இங்கு உற்பத்தியாகும் திரைச்சீலைகள், கு‌ஷன்கள், மேஜை விரிப்பான்கள், கிச்சன் டவல்கள், பில்லோ கவர்கள் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் போன்ற நாடுகளுக்கும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

கரூரில் உள்ள 400 ஏற்றுமதியாளர்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 1800 கோடி அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் சுமார் 2 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஜனவரிக்குப் பிந்தய கடுமையான நூல்விலை ஏற்றும், தற்போதைய மத்திய அரசின் ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஜவுளி உற்பத்தி 20% சதவீதம் சரிந்துள்ளது. சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த சர்வதேச ஜவுளி கண்காட்சியில் சுமார் ரூ.500 கோடிக்கு (ஜி.எஸ்.டி. அமலுக்கு முன்பு) கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்கள் பெற்றனர்.

 

இதில் முதல்பாதி ஆர்டர்களை ஏற்றுமதி செய்துவரும் நிலையில் தரமான மற்றும் அங்குள்ள தேவைக்கு ஏற்ப கூடுதல் ஆர்டர்களை இறக்குமதியாளர்கள் கேட்கிறார்கள். அப்போது முந்தைய அதே விலைக்குக் கேட்கின்றனர். இதனை இங்குள்ள ஏற்றுமதியாளர்களால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.

 

தடையில்லா நூல்விலை ஏற்றம், உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் வெளிநாட்டினர் கேட்கும் ஆர்டர்களுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளது. இதனால் வெளிநாட்டினரின் ஆர்டர்களை கரூர் ஏற்றுமதியாளர்கள் தவிர்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுபற்றி  கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஆர்.ஸ்டீபன் பாபு கூறியதாவது:-

 

நூல் விலை உயர்வு, ஜவுளி சார்ந்த மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு சேவை வரியினால் தொழில் செய்ய முடியவில்லை. ஏற்கனவே நூல் விலை ஏற்றத்தால் வெளிநாட்டு ஆர்டர்களை கொடுக்க முடியாமல் தவிக்கும் நிலையில் தற்போதைய ஜி.எஸ்.டி. மேலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போதைய உற்பத்தி செலவு அதிகரிப்பால் சுமார் ரூ. 150-ல் இருந்து ரூ. 200 கோடி அளவுக்கு வெளிநாட்டு ஆர்டர்களை கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெற முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்டர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டினருக்கு போய்விட்டது. அன்னிய செலாவணியில் அதிகம் பங்கு வகிக்கும் ஜவுளி உற்பத்தியில் மத்திய ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுதான் நிஜம்.

 

இதே நிலை நீடித்தால் ஜவுளி தொழிலை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. ஜவுளி உற்பத்தி சார்ந்திருக்கின்ற விசைத்தறி, சாயத்தொழில், கைத்தறி, தையற்தொழில், கை வேலைப்பாட்டு தொழில் போன்ற தொழிலுக்கு மத்திய அரசு 12 முதல் 28 சதவீதம் வரைசேவை வரி விதித்துள்ளதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கரூரில் மட்டும் தொழில் நெருக்கடியால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

 

ஜவுளி தொழிலை உண்மையில் காப்பாற்ற வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதினால் ஜவுளி சார்ந்த பொருட்களுக்கும், உற்பத்தி பொருட்களுக்கும் ஒரே சீராக 5 சதவீதம் வரிவிதிக்க வேண்டும். கட்டுப்பாடு இன்றி எகிறும் நூல்விலையை கட்டுப்படுத்தி இடைத்தரகர்களின் தலையீட்டினை தடுக்க மத்திய அரசு கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும்.

 

நூல்விலையை குறைத்து சீரான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டும். நாளுக்கு நாள் கரூர் ஜவுளி உற்பத்தி குறைந்து கொண்டேயிருக்கிறது. அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

செவி சாய்க்குமா நமது அரசுகள் ?



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...