???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   22 , 2018  01:57:24 IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ”சாமி, சிங்கம் போன்ற படங்களை பார்த்துவிட்டு அதே போல் சில காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் அட்வைஸ் கொடுக்க வேண்டும். நான் சட்டமன்றத்திலேயே பேசியவன். உங்களுக்கு போதை ஏற்றினால் தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம்” என்று பேசினார்.
 
மேலும் தமிழக முதல்வரை மேடையில் விமர்சித்த அவர், குறிப்பிட்ட சமுதாயம் குறித்தும் சில கருத்துகளை பேசியிருந்தார். மேலும் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டது குறித்தும் கருணாஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக காவல்துறை கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 
இதனை தொடர்ந்து கூவத்தூர் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலளித்த கருணாஸ், அவர் பெரிய அரிச்சந்திரன் என்பது உலகத்திற்கே தெரியும் என விமர்சித்தார். மேலும் கூவத்தூர் விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், சாதாரண தலைவர்களுக்கு அளிக்கும் பாதுகாப்புகூட தனக்கு வழங்கவில்லை என்று வருத்தம் தெரிவித்த கருணாஸ், சாதி ரீதியில் தன் மீது தாக்குதல் நடக்கும் என்பதாலேயே தொகுதிக்கு செல்லவில்லை என்றார்.
 
மேலும் முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களை தமிழகம் முழுவதும் போலீசார் தாக்குவதாகவும், எம்எல்ஏவான தனக்கே பிரச்சனைகள் வரும்போது சாதாரண மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கருணாஸ் கேள்வி எழுப்பினார்.
 
தான் பேசிய வீடியோ துண்டு, துண்டாக எடிட் செய்யப்பட்டுள்ளது. முழு வீடியோவை பார்த்தால் பேசியதில் தவறில்லை என புரியும் என்றும், பொது மேடையில் ஒருமையில் பேசியதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கருணாஸ் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...