அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

54 புத்தகங்கள்... ஒரே தொகுதியாக கருணாநிதியின் கடிதங்கள்!

Posted : புதன்கிழமை,   மே   25 , 2022  16:37:33 IST


Andhimazhai Image
முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி, தன் கட்சியினருக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, 54 புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளன. 
 
இந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று இந்தத் தொகுதியை வெளியிட இலக்கு வைக்கப்பட்டு, வேலைகள் தொடங்கின. கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்து கடந்த டிசம்பரில் இறந்துபோன சண்முகநாதன், இந்தக் கடிதங்களைத் தொகுக்கும் பணியை மேற்கொண்டார். புத்தகமாக்கும் பணியில் மூன்று ஆண்டுகளாக நடந்துவந்த வேலைகள் முடிந்து, கருணாநிதி எழுதிய 4 ஆயிரத்து 41 கடிதங்களும் இப்போது ஒரே முழுமையான தொகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. 
 
மொத்தம் 21ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த நூலை, சென்னையைச் சேர்ந்த சீதை பதிப்பகம் வெளியிடுகிறது. 
 
கருணாநிதி அவர்களால் 1968ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை எழுதப்பட்ட கடிதங்கள் இதில் இடம்பெறுகின்றன. மொத்தக் கடிதங்களில் பத்து கடிதங்கள் மட்டும் ஒன்றுபோலவே இருந்த காரணத்தால், அதேகடிதம் மறுபடியும் வராதபடி தொகுக்கப்பட்டுள்ளது என்கிறார், தொகுப்பின் வெளியீட்டாளர் இராஜசேகர். இவரும் கருணாநிதி பிரபலமான திருவாரூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
” கலைஞர் கடிதங்களைத் தொகுத்ததில் அவரின் செயலாளர்கள் சண்முகநாதன், இராஜமாணிக்கம் இருவரும் பெரும் பணியைச் செய்துவிட்டார்கள். அவர்களின் உதவி பெரிய அளவினது. நாங்கள் புத்தகமாக்கும் பணியைச் செய்திருக்கிறோம். இதை யாரும் செய்யமுடியும். இதைச் செய்வதற்கு எங்களுக்கு வாய்த்தது.” என அடக்கமாகச் சொல்கிறார், வெளியீட்டாளர் இராஜசேகர். 
 
2000ஆவது ஆண்டுக்குப் பிறகுதான் மின்னுரு வடிவில் கடிதங்கள் இருக்கின்றன. அதற்கு முன்னர், அச்சு வடிவத்தில் மட்டுமே ‘கலைஞர் கடிதங்கள்’ பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் மீண்டும் தட்டச்சுசெய்தே தொகுத்துள்ளனர். 15 பேர் வரை மூன்றாண்டு காலம் இந்தப் பணியைச் செய்துள்ளனர். அத்துடன் பொருள் பிழையின்றி திருத்தம் பார்ப்பதிலும் 15 பேர்வரை மாறிமாறி ஈடுபட்டுள்ளனர்.     
 
”கலைஞரின் செயலாளர்களின் பணி ஒரு பக்கம், அத்துடன் கோபாலபுரம் இல்லத்துப் பணியாளர்களும் நாங்கள் கேட்டபோதெல்லாம் தங்கள் வேலைநேரத்தைக் கடந்து எங்களுக்கு உதவிசெய்தார்கள். அண்ணா அறிவாலயம் பேராசிரியர் ஆய்வு நூலகத்தின் நூலகர்களும் பணியாளர்களும் இதற்காகச் செய்த உதவியும் முக்கியமானது. நூல்வடிவம் பெறுவதற்காக உதவிய அனைவரும் எங்கள் நன்றிக்கு உரியவர்கள்.” என நெகிழ்கிறார், பதிப்பாளர்.
 
இந்த ‘கலைஞர் கடிதங்கள்’ புத்தகத் தொகுப்பின் எடை எவ்வளவு தெரியுமா... 27 கிலோ. அதாவது, 100 தொகுப்புகளின் மொத்த எடை கிட்டத்தட்ட 3 டன். 
 
தங்கள் பதிப்பகத்தில் 100 செட் புத்தகங்கள் வைப்பதற்குத்தான் இடம் இருக்கிறது என்கிறார் இராஜசேகர். 
 
முன்வெளியீட்டுத் திட்டத்தில் 11 ஆயிரம் ரூபாய் என விலைவைத்திருந்தார்கள். கடந்த 20ஆம் தேதியுடன் அந்தத் திட்டம் முடிவடைந்துவிட்ட நிலையில், இப்போதைக்கு 21,510 பக்கங்களைக் கொண்ட இந்தத் தொகுதியின் விலை ரூ.16 ஆயிரம். 
 
அண்மையாக, புத்தகமாக்கச் செலவு கூடிக்கொண்டே இருக்கும்நிலையில் இந்தப் புத்தகத்தின் சந்தை வரவு, சவாலானதுதான். ஆனாலும் ஏராளமானவர்களுக்கு பெரும் பொக்கிசமாகவும் இருக்கக்கூடும் என்பதிலும் ஐயம் இல்லை. 
 
- இரா. தமிழ்க்கனல்
 

English Summary
karunanidhi's letters as a collection released soon

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...