அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்!

Posted : சனிக்கிழமை,   மே   28 , 2022  19:05:31 IST

தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி என அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

 
சென்னை அரசு ஓமந்தூரார் தோடத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையைத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன்  “இன்று நமக்கு ஒரு சிறந்த மகிழ்ச்சியான நாள். காரணம் கருணாநிதி நம்மிடம் நேரில் பேசுவதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டு கண்ணீர் விடாமல் வெளியே வர முடியவில்லை. கருணாநிதிக்கு அங்கு தான் சிலை வைக்க வேண்டும் என்று இடத்தை தேர்வு செய்தவர் முதல்வர் ஸ்டாலின் தான்.

 
சாதாரண இடமாக இருந்த அந்த இடத்தை மகத்தான சட்டசபை இருக்கும் இடமாக மாற்றியவர் கருணாநிதி. கட்டுமானப் பணிகள் நடக்கும் போது, ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்துப் பார்த்து அடுக்கினார்.

 
அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன். இதைக் கட்டும் வேலை எனக்கு இருந்தது. இருப்பினும், இதற்கு யோசனை சொன்னது எல்லாம் கருணாநிதி தான். அவர் கனவு நினைவாகி வந்த சமயத்தில், அதை இப்படி ஆக்கிவிட்டார்கள்.

 
கருணாநிதி சிலையை வைக்க ஓமந்தூரார் தோட்டத்தை ஸ்டாலின் தேர்வு செய்தபோது அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாரே என்று நினைத்தேன். வயதில் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால், உங்கள் அறிவு திறமை முன்பு நாங்கல் இளையவர்கள்.

 
இங்குக் காமராஜர் சிலை அதைத் திறந்தது நேரு. அடுத்து பெரியார் சிலை அதைத் திறந்தது கருணாநிதி. அடுத்து அண்ணா சிலை அதைத் திறந்தது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராமசாமி உடையார். இன்று கருணாநிதி சிலையை நீங்கள் திறந்துள்ளீர்கள்.

 
இந்த சிலை இருக்கும் வரை உங்கள் பெயர் இந்த அண்ணா சாலையில் இருக்கும். தமிழகத்தைத் தலை நிமிரச்செய்தவர், திராவிடர் முன்னேற்றக்கழகத்தை 50 ஆண்டுகள் தோளில் சுமந்தவர் கருணாநிதி. அண்ணா சாலையில் சாதாரணமாகக் காட்சியளித்த இடத்தில் மகத்தான கட்டிடத்தை எழுப்பியவர் கருணாநிதி.

 
சரியான இடத்தில் முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது வரலாற்றில் இடம் பெற்று விட்டது. கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நேரடியாக வந்து விசாரித்ததை நேரில் பார்த்திருக்கிறேன். கருணாநிதி சிலையை நீங்கள் திறந்து வைத்தது பெரு மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

 
இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...