???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

” ஒன்றாக இருந்திருந்தால் என்றைக்கோ தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்”- கருணாநிதி

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2013  05:15:16 ISTஇலங்கை அதிபர் ராஜபக்ச இந்திய வருகையைக் கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம்அருகில் பிப்ரவரி எட்டாம் தேதி ‘டெசோ’ சார்பில் கறுப்பு உடை அணிந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரை:-

அனைத்துலகும் வெறுக்கின்ற அளவுக்கு தமிழினத்தைக் கூண்டோடு அழிப்பேன் என்று விரதம் பூண்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற சர்வதேச போர்க்குற்றவாளி எனப்படுகின்ற ராஜபக்சேயின் இந்திய வருகையைக் கண்டித்து நாம் மிகப் பிரம்மாண்டமான கறுப்புச் சட்டை பேரணியை - இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நேற்று நான் திருச்சியிலேயே நடைபெற்ற இலட்சக்கணக்கான மக்கள் கூடிய மாபெரும் கூட்டத்தில் இன்று உங்கள் முன்னால் என்ன கருத்துக்களை எடுத்துச் சொல்கின்றேனோ அவைகளையெல்லாம் விரிவாக

விளக்கியிருக்கின்றேன். அதிலே முக்கியமான ஒன்று - நம்முடைய தமிழர்களின் கலை கலாச்சாரம் இலக்கியம் பண்பாடு மொழி அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபக்சேயின் அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நேற்று அந்தக் கூட்டத்திலே நான் விளக்கி; அதற்குச் சில எடுத்துக்காட்டுகளையும் எடுத்து வைத்தேன். குறிப்பாக இங்கே தம்பி ஸ்டாலின் பேசியபோது சொன்னதைப் போல,மற்றவர்கள் நினைவூட்டியதைப் போல, நம் தமிழர்களுடைய இனம்தான் அழிக்கப்படுகிறது, இரத்தம்தான் மழையாகப் பொழிய வைக்கப்படுகிறது என்பது மாத்திரமல்லாமல், நாம் கண்போல் காத்த அருமைத் தமிழ் - அந்த மொழியும் அடையாளம் தெரியாமல் அங்கே ஆக்கப்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தமிழின் பெயரால் இதுவரை விளங்கிய கிராமங்களெல்லாம் கடந்த சில நாட்களாக ராஜபக்சேவினுடைய கொடுங்கோலால் அழிக்கப்பட்டு மாற்றுப்பெயர்கள் பூண்டிருக்கின்ற காட்சியை நாம் காணுகின்றோம்.

நெடுங்கால்பேட்டை என்றிருந்த தமிழ்ப் பெயரை கடந்த வாரம் ரித்தி

தெண்ணா என்று மாற்றியிருக்கிறார்கள். ஆலங்குளம் என்று தமிடழ் ஈழத்திலே இருந்த அழகான தமிழ்ப் பெயரை

மாற்றி கெம்புருவெணா என்று ஆக்கியிருக்கிறார்கள்.

முத்தூர் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, அந்தக் கிராமத்துக்கு மூடுதரா

என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தோப்பூர் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, துபாபுறா என்று சிங்களத்திலே ஆக்கியிருக்கிறார்கள்.

பெரிய விளாங்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, மகத்திவுள்வேனா

என்று சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

கொக்குவில் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கோகாவிலா என்று ஆக்கி

யிருக்கிறார்கள். மல்லகம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வல்லகாமா என்று ஆக்கியிருக்கிறார்கள். கந்தர்ஓடை என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கத்துருகோடா என்று ஆக்கியிருக்கிறார்கள். பருத்தித் துறை, பருத்தித் துறை என்று நாம் பலநேரங்களிலே பேசியிருக்கிறோம்; பத்திரிகைகளிலே படித்திருக்கிறோம். அந்த பருத்தித் துறை என்ற தமிழ்ப் பெயரை இப்பொழுது மாற்றி, பெத்துருதோடுவா என்று ஆக்கி யிருக்கிறார்கள். கட்டைக்காடு என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, கதேக்கடுவா என்று ஆக்கியிருக்கிறார்கள்.

ஆனையிரவு என்ற தமிழ்ப் பெயரை - அடிக்கடி கேட்டிருக்கிறோம்,

உச்சரித்திருக்கிறோம், நமக்கு பழக்கமாகிவிட்ட சொற்களிலே ஒன்றாக,

பெயர்களிலே ஒன்றாக ஆகியிருக்கிறது. அலிமாண்டு கடுவா என்று

ஆக்கியிருக்கிறார்கள்.

கிளிநொச்சி - அங்கே நடைபெற்ற போர்களைப் பற்றி, அங்கே

அமைக்கப்பட்ட முகாம்களைப் பற்றி, அங்கே இருந்து போராடிய மாவீரர்களைப் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கிளிநொச்சியை மறவாமல் பேசியிருக்கிறோம். அந்த கிளிநொச்சி, இப்பொழுது கிரணிக்கா என்று மாற்றப்பட்டிருக்கிறது.

வெண்ணீர்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வண்ணாவீவா என்று ஆக்கியிருக்கிறார்கள். கள்ளிஓடை என்ற தமிழ்ப் பெயரை கல்லியாடா என்று சிங்களத்திலே மாற்றியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு, எவ்வளவு அழகான பெயர் - முல்லைச் சரம், முல்லைக்

கொடி என்பதைப் போல முல்லைத் தீவு என்று இப்படி அழைக்கப்பட்ட மென்மையான அந்தப் பெயரை மாற்றி முலடுவா என்று ஆக்கியிருக்கிறார்கள்.

மாங்குளம் என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, மயூரவிவா என்று

ஆக்கியிருக்கிறார்கள். வவுனியா என்ற தமிழ்ப் பெயரை மாற்றி, வன்னிமாவா என்று ஆக்கியிருக்கிறார்கள். கோவில் குடியிருப்பு என்ற தமிடிநப் பெயரை மாற்றி, கோவிக்குளிசா என்று ஆக்கியிருக்கிறார்கள். சிங்களர்களுக்கு கோவிலும் கூடாது, தமிழர்களின் குடியிருப்பும் கூடாது. அத்தகைய வஞ்சினத்தோடு அங்கிருந்த இந்துக் கோவில்கள், தமிடிநக் கோயில்கள், தமிழர்களுடைய குடியிருப்புகள் அனைத்தையும் போருக்குப் பிறகு அழித்திருக்கிறார்கள். இது அமைதியான காலம் நாங்கள் அமைதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று ராஜபக்சே முழங்கிக் கொண்டிருக்கிறாரே, இதுதான் அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற அமைதி. நம்முடைய நெஞ்சின் ஆழத்தில் இருக்கும் தமிழ்ச் சொல்லை - தமிழ்ப் பெயரை அழித்துவிட்டு, சிங்களத்திலே பெயரிடுவது எதற்காக என்றால், ஊர் அடையாளம் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல. இப்படித்தான் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் அந்தக் காலத்திலே, நம்முடைய இனத்தின் - மொழியின் ஆக்கத்தைக் குறைப்பதற்காக மாற்றப்பட்டன.

ஸ்ரீரங்கம் - ஏற்கனவே திருவரங்கமாக இருந்தது. அதை ஸ்ரீரங்கம்

என்று மாற்றி, ஸ்ரீ புகுந்துவிட்டது. திருவில்லிபுத்தூர் நம்முடைய தமிழ்ப் பெயர், அதை ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஆக்கிவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். திருபெரும்புதூர் - உங்களுக்குத் தெரியும். அதை ஸ்ரீபெரும்புதூர் என்று ஆக்கினார்கள். இப்படி எப்படி இங்குள்ள இனப் பகைவர்கள் நம்முடைய தமிழ்ப் பெயர்களுக்கெல்லாம் எதிரிகளாக இருந்து, ஸ்ரீயை புகுத்தி வடமொழிச் சொல்லைப் புகுத்தி, மாற்றினார்களோ, அதைப்போல ராஜபக்சே இலங்கையிலே தமிழ்ப் பெயர்களை அழித்துவிட்டு, சிங்களப் பெயர்களை இன்றைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களுடைய கலை, கலாச்சாரம், நாகரிகம்,பண்பாடு அனைத்தையும் அழித்து, எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டேன் என்று இங்குள்ளவர்கள் சிலர் எப்படி கனவு காண்கிறார்களோ; அந்தக் கனவை அவர்களுடைய பதிலி போல இருந்து கொண்டு ராஜபக்சே கண்டு கொண்டிருக்கிறார். அவருக்குப் பாடம் கற்பிக்கத்தான், இன்றைக்கு தமிழகமே திரண்டிருக்கின்றது.

இங்கே நாம் போராடுவதைப் போல, இந்தியாவிலே வேறு சில பகுதிகளிலும் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களையெல்லாம் நான் வாழ்த்துகிறேன். அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கின்றேன். அதேநேரத்திலே அவர்கள் இதை வாழ்த்துகின்ற பெருங்குணத்தை - பெருந்தன்மையைப் பெற வேண்டுமென்று பிரார்த்திக் கின்றேன்; யாரைப் பிரார்த்திப்பது? அவர்களைத்தான் பிரார்த்திக்க வேண்டும். அதற்காக வேறு யாரை நான் பிரார்த்திக்க முடியும். எல்லோரும் ஒன்றாக இருந்து போராடினால் வெற்றி நிச்சயம். இதே கொள்கையை இலங்கையிலே – தமிழ் ஈழத்திலே பின்பற்றியிருந்தால், இன்றைக்கு நாம் ராஜபக்சேவை எதிர்த்து, ஒரு

கூட்டம் போடவேண்டிய அவசியமே இருந்திருக்காது; தமிழீழம் என்றைக்கோ கிடைத்திருக்கும், தவறிவிட்டோம். அந்த ஒற்றுமையை இனஉணர்வை பெறுகின்ற காலம்தான் நாம் வெற்றியினை உருவாக்கக்கூடிய காலமாகும்.

எனவே நாம் இப்போது நடத்துகின்ற இந்த ஆரம்பக்கட்டப் போராட்டங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே டெசோ என்பது பல ஆண்டுகாலத்திற்கு முன்பே அகிலஇந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து மாபெரும் மாநாடு நடத்திய இயக்கம். அந்த இயக்கத்தின் சார்பில் - இங்கே எனக்கு முன்னால் பேசிய நம்முடைய ஆசிரியர் அவர்களும் மற்றும் நம்முடைய டெசோ இயக்கத்தின் கண்மணிகளும் தெரிவித்தபடி, மார்ச் 7ஆம் தேதி டெல்லித் தலைநகரத்தில் """"ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் "", """"சேனல் - 4"", """"மனித உரிமைகள் கண்காணிப்பு"" ஆகிய அமைப்புகள் கலந்து கொள்ளும் வகையில் நமது டெசோமாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது. அதையொட்டி அங்கே நடைபெறுகின்ற கருத்தரங்கம் - டெல்லியிலே உள்ள """"கான்ஸ்டிட்யூஷன் கிளப்""அரங்கில் நடைபெற இருக்கிறது. அந்த கருத்தரங்கில் - நடைபெற உள்ள கலந்துரையாடலில் நாம் என்ன முடிவுகள் எடுக்கப் போகிறோம் என்பது இன்றைய நமது போராட்டத்தின் எழுச்சியை ஒட்டியதாக - நமது உணர்வுகளின்

படப்பிடிப்புகளாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் நீங்களும் உங்களுடைய உள்ளங்களை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு; இந்த டெசோ இயக்கம் உருவாக்கியிருக்கின்ற இந்த ஆர்வத்தை மேலும் மேலும் பெருக்குவதற்கு ஆக்கம் அளியுங்கள்! ஊக்கம் வழங்குங்கள்! என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...