![]() |
சூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் கனவு நிறைவேறியுள்ளது: கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்!Posted : புதன்கிழமை, மார்ச் 28 , 2018 04:55:38 IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து வேலை செய்யும் தனது கனவு நிறைவேறியுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ''இந்தப் படம் எளிமையான ஒரு யதார்த்தக் கதை. ஆனால் அதே வேளையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் விரும்பும் அக்மார்க் ரஜினி படமாகவும் இருக்கும். படத்தின் திரைக்கதையை ரஜினி ஸார் மிகவும் விரும்பினார்.'' என்று கூறியுள்ள கார்த்திக் சுப்பராஜ் ''ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த கேரக்டரை ரஜினிகாந்த் சாரை மனதில் வைத்துக்கொண்டு தான் எழுதினேன். ஆனால் அவரிடம் சென்று என் படத்தில் நடியுங்கள் என்று கேட்கப் பயமாக இருந்தது. பின்னர் பா.ரஞ்சித்தின் படத்தில் ரஜினிகாந்த் நடித்த பிறகுதான் அந்தப் பயமும் தயக்கமும் போனது. ஜிகர்தண்டா படத்தைப்பார்த்து ரஜினி ஸார் மிகவும் பாராட்டினார். நல்ல கேரக்டர் இருந்தால் தன்னை தாராளமாக அணுகலாம் என்று ரஜினி ஸார் கூறியது எனக்கு தன்னம்பிக்கை அளித்தது. அதன்பிறகே அவருக்கு கதை எழுதினேன். ரஜினி சாருடன் படம் பண்ணுவது மிகப்பெரிய கனவு. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய எண்ணமாக இருக்கிறது.’’ இவ்வாறு அவர் கூறினார்.
|
|