???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விலகும் கார்த்தி பதறும் லிங்குசாமி.

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   18 , 2014  00:49:38 IST

 அஞ்சான் படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க எண்ணிஎழுநாள் என்றொரு படத்தை எடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தார்கள். அஞ்சான் படம் வெளியானதற்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கமாட்டார் என்று சொல்லப்பட்டது. அஞ்சான் ஒடவில்லையென்பது மட்டும் அதற்குக் காரணமில்லை. முதலில் ஒரு கதை சொல்லி, அந்தக்கதை சீமானுடையது என்று தெரிந்த பின்னர் அவசரஅவசரமாக மாற்றிச் செய்யப்பட்ட கதைதான் இப்போது அஞ்சானாக வந்திருக்கும் கதை. இப்படிச் செய்தது முழுக்க முழுக்க லிங்குசாமிதானாம். ஆனால் படம் சரியில்லை என்று பேச்சு வந்ததும், நான் நான்கு கதைகள் சொன்னேன் அவற்றில் அந்தக்கதையைத் தேர்ந்தெடுத்தது சூர்யா தான் என்றும் சூர்யாவின் விருப்பத்துக்கேற்பவே காட்சிகள் அமைக்கப்பட்டன என்றும் லிங்குசாமி சொல்லத் தொடங்கிவிட்டாராம். அது சூர்யாவின் கவனத்துக்கு வந்ததால் அவர் கோபமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

சூர்யாவும் கார்த்தியும் எல்லா விசயங்களையும் பரிமாறிக்கொள்வர்கள் என்பதால் விலங்குசாமியின் இந்த குணநலன்களையும் கார்த்தியிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் சூர்யா. அதனால் அப்படிப்பட்டவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டாம் என்று கார்த்தி நினைக்கிறாராம். அதேசமயம் இப்போது அதை வெளிப்படையாகச் சொல்லவேண்டாம் என்றும் முடிவுசெய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்தச் செய்தி லிங்குசாமிக்கும் எட்டிவிட்டதாம். இதனால் பதட்டமான லிங்குசாமி, கார்த்தியைச் சமாதானம் செய்து அவருடன் இணைந்து படம் செய்தேயாகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம். இதற்காக ஞானவேல்ராஜாவைச் சந்தித்து எப்படியாவது இந்தப்படம் நடக்க உதவுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சூர்யா, கார்த்தி சகோதரர்கள் அண்மைக்காலமாக ஞானவேல்ராஜாவையே சற்றுத் தள்ளிவைத்திருக்கிறார்களாம். சோதனை மேல் சோதனை.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...