செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்!
விசா முறைகேடு வழக்கில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தை நோட்டீஸ் வழங்காமல் முன்னறிவிப்பின்றி கைது செய்ய மாட்டோம் என…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்!
Posted : சனிக்கிழமை, மே 21 , 2022 07:56:11 IST
விசா முறைகேடு வழக்கில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தை நோட்டீஸ் வழங்காமல் முன்னறிவிப்பின்றி கைது செய்ய மாட்டோம் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்துள்ளது.
பஞ்சாப்பில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற, 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக விசா பெற்று தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி எம்.கே. நாக்பால் தலைமையில் விசாரணைக்கு வந்த போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால் 3 நாட்களுக்கு முன்னர் முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கார்த்தி சிதம்பரம் மே 24 ஆம் தேதி இந்தியா திரும்ப உள்ள நிலையில், மனுதாரர் சட்ட ரீதியான நிவாரணம் பெறுவதற்கு இந்த அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் வழங்காமல் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.
|