???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் புயல், மழைக்கு 22 பேர் பலி 0 வாக்களிக்க வந்த முதியவர்கள் 5 பேர் உயிரிழப்பு! 0 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது! 0 பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் ! 0 தமிழகத்தில் 70.9% வாக்குப் பதிவு! 0 சிதம்பரம் தொகுதியில் தலித் வீடுகளை அடித்து நொறுக்கிய கும்பல்! 0 வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம் 0 வரிசையில் நின்று வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி 0 மூன்றே நாட்களில் ரூ.422 கோடிக்கு மது விற்பனை! 0 மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணிநீக்கம் 0 மதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது! 0 நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் வாக்களித்தனர்! 0 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதி 0 சென்னை அருகில் 1381 கிலோ தங்கம் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   மார்ச்   24 , 2019  22:25:14 IST

தமிழகத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
 
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அங்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் சிதம்பரம் எம்.பியாக இருப்பதால், கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் ஒதுக்க காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
 
கார்த்தி சிதம்பரமே சிவகங்கையில் போட்டியிட அதிக வாய்ப்பு இருந்ததால், சுதர்சன நாச்சியப்பன் தவிர வேறு பெரிய தலைவர்கள் அங்கு மனு தாக்கல் செய்யவில்லை. சுதர்சன நாச்சியப்பனுக்கு சீட் ஒதுக்குவதிலும் அங்கே சிக்கல் இருக்கிறது.
 
விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மாணிக் தாகூரின் சித்தப்பாவான சுதர்சன நாச்சியப்பனுக்கு தலைமை சீட் ஒதுக்காது என்றும் கூறப்படுகிறது. எனினும், சுதர்சன நாச்சியப்பனுக்கு ஆதரவாக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இருந்தார்.
 
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தையே காங்கிரஸ் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. எதிரணியில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். கடந்த தேர்தலிலும் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு நான்காவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...