???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   14 , 2018  00:49:38 IST

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல்.
 
கடந்த 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. 
 
இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூபாய் 1.16 கோடிக்கான சொத்துக்களை முடக்கியும் நடவடிக்கை எடுத்தது. 
 
இந்நிலையில், வழக்கு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் தீவிரமாக விசாரித்து வருகிறது. இப்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது இன்று அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தற்போது கார்த்திக் சிதம்பரம் ஜாமீனில் வெளியே உள்ளார். 
 
மேலும், அவருடைய தந்தை ப.சிதம்பரத்திடம் இதே வழக்கு சம்பந்தமாக அமலாக்கப்பிரிவு 2முறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று கார்த்திக் சிதம்பரம் உள்பட 4 பேர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...