???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகா தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  23:29:27 IST

கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் தொடங்குகிறது.
 
இந்த மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும். மறுநாள் 25-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது. 
 
தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால், தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...