???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி 0 கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு 0 மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு! 0 தமிழ்ப் படங்களில் பிகில் வசூல் சாதனை! 0 வடகிழக்கு மாநிலங்கள் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்: இந்திய ராணுவம் 0 தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை 0 சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: நீதிமன்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! 0 மாமாங்கம்: திரைவிமர்சனம் 0 வடகிழக்கு மாநிலங்களில் கொந்தளிப்பு தொடர்கிறது! 0 பிரிட்டன்: கட்சி தலைவர் பதவியிலிருந்து ஜெரமி கார்பின் ராஜினாமா 0 வடகிழக்கு மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது: பிரதமர் 0 திண்டுக்கல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை 0 பாஸ்போர்ட்டில் தாமரை: மத்திய அரசு விளக்கம் 0 குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம்: பினராயி விஜயன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   14 , 2019  22:45:09 IST

கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணியில் உள்ள 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 2 பேரும் ஆளுங்கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் தங்கி வருகின்றனர். ஒருவேளை சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால், கூட்டணியின் பலர் 118-லிருந்து 100-ஆக குறைந்துவிடும். பெரும்பான்மை பலம் 113-லிருந்து 105-ஆக குறைந்துவிடும். பாஜகவிற்கு 105 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருவரையும் சேர்த்தால் அக்கட்சியின் பலம் 107-ஆக உள்ளது.

இதனிடையே, ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், 16-ம் தேதி வரை சபநாயகர் ராஜினாமாவை ஏற்ற்க்கொள்வது அல்லது தகுதி நீக்கம் எந்த முடிவை எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, தங்கள் பெரும்பான்மையை சட்டப்பேரவை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான நேரத்தை ஆளுநர் குறிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் இன்று காலை அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள், மும்பை காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு துளிகூட விருப்பம் இல்லை என்பதால் அவர்களிடம் இருந்து அச்சுறுத்தல் வரக்கூடும் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...