???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  21:57:55 IST

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். மேலும், 2023-ம் ஆண்டுவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர்களை பதவி நீக்கம் செய்தது செல்லும் என்றும் அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 பேர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு தொகுதிகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது பா.ஜ.கவில் இணைந்த 13 பேர், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருக்கும்போது போட்டியிட்ட அதே தொகுதிகளில் தற்போது பா.ஜ.க சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைக்க 15 தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...