???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக இடைத்தேர்தல்: காங். - மஜத கூட்டணிக்கு தீபாவளி பரிசு!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2018  06:10:25 IST

கர்நாடக மாநிலத்தில் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் போட்டியிட்டது.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலே சிவமோகா தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி முன்னிலை பெற்று வந்தது. சிவமோகா தொகுதியில் மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலை பெற்று வந்தார்.
 
வாக்கு எண்ணிக்கை முடிவில் மாண்டியா தொகுதியில் மஜத வேட்பாளர் ஷிவரமேகவுடா சுமார் 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். பாஜகவின் கோட்டையாக கூறப்பட்ட பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ் உகரப்பா சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஷிவமோகா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் பி.ஒய்.ராகவேந்திரா 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 
ராமநகரா சட்டமன்ற தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்ட முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஜம்கண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நயமகவுடா சுமார் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
 
“இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றே ஆச்சரியப்பட எதுவும் இல்லை” என அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் மக்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...