???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   19 , 2019  23:39:18 IST

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு, ஆளுநர் வஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பெரும் பரபரப்பிற்கிடையே நேற்று காலை கர்நாடக சட்டப்பேரவை மீண்டும் கூடியபோது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்தபோது பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், ஆளுநரின் கடிதம் முதலமைச்சருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தன்னை நிர்பந்திக்க, இதுவரை யாரும் பிறக்கவில்லை எனவும் சபாநாயகர் காட்டமாக தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசரப்பட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். பாஜகவினர் ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே மாலை ஆறு மணிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு கெடு விதித்து கடிதம் அனுப்பினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவையில் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது காதல் கடிதம் தன்னை மிகவும் கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உடன் விமானத்தில் பயணிக்கும் படத்தை வெளியிட்ட அவர், கடந்த பத்து நாட்களாகவே எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுக்கொண்டே சென்றதால், பேரவையை சபாநாயகர் ரமேஷ் குமார் திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.

இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...