?????? ?????? ?????????? ??????????????
?????? ?????? ?????????? ?????? ???????????. ?????? ????? ??????? ??????????????..
?????????? ?????????? ????

??????????????? ????????, ??????????????? ?????????? ????????? ??????????
???????? ??????? 200 ??????????????? ???????

???????? ??????????
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை
2019 மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளாராக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானின் பெயர் உள்ளூர்…
????????????, ?????? ?????????? ???????? ?????? ???????????. ?????? ????? ????????????, ???????? ??????????????.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை
Posted : திங்கட்கிழமை, ஜனவரி 21 , 2019 22:44:36 IST
2019 மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளாராக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கானின் பெயர் உள்ளூர் காங்கிரஸ் கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை பூர்விகமாகக் கொண்டவர் சயீஃப் அலி கான். நடிகர் சயீஃப் அலி கான் போபாலின் பாரம்பரிய நவாப் அரச குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது தந்தை மறைந்த மன்சூர் அலி கான் பட்டோடி, பட்டோடியின் நவாப் ஆக அறியப்பட்டவர். கூடுதலாக, இவர் இந்தியக் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் ஆவார்.
நவாப் அரச குடும்பத்துக்கு இருக்கும் ஆதரவைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், போபாலின் இளைஞர்கள் வாக்கு வங்கியைப் பெறவும் நடிகை கரீனா கபூரை போபால் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என உள்ளூர் காங்கிரஸார் மேலிடத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளாக போபால் தொகுதியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் காங்கிரஸ் வருகிற தேர்தலில் நடிகை கரீனா கபூரை நிறுத்த வேண்டும் என்ரும் காங்கிரஸார் கோரி வருகின்றனர்.
கடந்த 1991-ம் ஆண்டு இதே போபால் தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று கரீனாவின் மாமனார் மன்சூர் அலி கான் பட்டோடி தோல்வியுற்றார்.
|