![]() |
கண்ணை நம்பாதே: திரைவிமர்சனம்!Posted : வெள்ளிக்கிழமை, மார்ச் 17 , 2023 18:15:50 IST
ஒரு மரணத்தின் பின்னணியில் நிகழும் துரோகத்தையும், நயவஞ்சகத்தையும் அம்பலப்படுத்தும் அப்பாவி இளைஞர் ஒருவரின் கதையே கண்ணை நம்பாதே திரைப்படம்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ஒரே அறையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அறைக்கு வந்த முதல் நாளே இருவரும் பாருக்கு கிளம்புகின்றனர். அப்போது, பூமிகா ஓட்டி வரும் கார் விபத்துக்குள்ளாகிறது. அதை பார்க்கும் உதயநிதி, பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். மறுநாள் காலை அந்தக் காரை பூமிகாவிடம் கொண்டு சேர்க்க நினைக்கிறார் உதயநிதி. ஆனால், காரில் பூமிகா மரணமடைந்த நிலையில் கிடக்கிறார். இதற்குப் பின் என்ன நடக்கிறது? அந்த மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன? அந்த சம்பவத்தில் உதயநிதி எப்படி சிக்கினார்? போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.
|
|