???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மொழித்திணிப்பை திமுக எதிர்க்கும்: கனிமொழி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   02 , 2019  23:13:04 IST

அதிமுக அரசு ஆட்சிக்காக உள்கட்சி பிரச்சனைகளை மறைத்து ஒற்றுமையாக இருப்பது போல் வெளித் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,  அதிமுக உள்கட்சி பிரச்னைகளை மறைத்து ஆட்சிக்காக ஒற்றுமையாக இருப்பதுபோல் வெளிப்புறத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார்.

அதன்பின்னர் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாதது, தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதிமுக அரசு தமிழகத்திற்கே பாதிப்பு என்றார்.

கல்விக் கொள்ளையில் ஆங்கிலத்திற்கு அடுத்து இந்தியை கட்டாயப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எந்த நிலையிலும் எந்த மொழியாக இருந்தாலும் மொழித்திணிப்பை திமுக எதிர்க்கும் என்றார். மேலும் மக்களவையில் எப்போதும் திமுக மக்களுக்காக தனது குரலை பதிவு செய்யும் என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...