அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வீண்பழி சுமத்துகிறார் வைகோ!- கனிமொழி

Posted : வியாழக்கிழமை,   மே   12 , 2016  13:06:53 IST

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வுகள் எல்லாம் முடிந்து பரப்புரை சூடுபிடித்துள்ளது. தமிழகமெங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பயணம் செய்து மக்களைச் சந்தித்து பரப்புரை செய்து வருகிறார் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. தொடர்ந்த முயற்சிகளுக்குப் பின்னால் அவருடன் உரையாடமுடிந்தது. அப்போது தர்மபுரியில் பயணத்தில் இருந்தார் அவர். திமுகவின் நட்சத்திர பரப்புரையாளர் என்பதால் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளுக்கும் சென்று அவர் பேசவேண்டி இருக்கிறது. இதனால் மிகவும் பரபரப்பாக இருக்கிறார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் பேசினோம். ஒவ்வொரு கேள்வியையும் ஆழமாக உள்வாங்கி நிதானமாகப் பதில் சொன்னார்.
 
திமுக தலைவர் மீது வைகோ வைத்த சாதிய ரீதியான விமர்சனம் குறித்து?
அது முடிந்துபோய்விட்டது. அதைத் திரும்பவும் கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று நினைக்கிறேன்.
 
 
கோவில்பட்டியில் திமுக சாதிய மோதலை உண்டாக்கப் பார்க்கிறது என்று குற்றச்சாட்டு தெரிவித்து தேர்தலில் நிற்காமல் வைகோ பின்வாங்கியிருக்கிறாரே?
திமுக என்றுமே சாதிக்கு எதிரான இயக்கம். நாங்கள் எந்தக் காலத்திலும் சாதி அரசியலை கையில் எடுத்தது கிடையாது. இது அவருக்கும் நன்றாகத் தெரியும். அவர் சொல்வது வீண்பழிதான்.
ஆர்.கே.நகர் தொகுதியில் விசிக சார்பில் வசந்திதேவி நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரை பொதுவேட்பாளராக ஏற்று திமுக தன் வேட்பாளரை திரும்பப் பெறும் வாய்ப்பு இருக்கிறதா?
வசந்திதேவியை நிறுத்தினார்கள் என்பதற்காக திரும்பப் பெற முடியுமா? பொது வேட்பாளர் என்றால் எல்லோரையும் கேட்டுவிட்டுத்தான் அறிவிக்கவேண்டும். எனக்குத் தெரிந்து அப்படி ஒரு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு இதுவரை வைக்கவில்லை.
 
 
சென்ற தேர்தலில் ஈழ விவகாரத்தை முன்வைத்து 
பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா ஈழத்தை கையில் எடுத்துப் பேசுகிறாரே?
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவுக்கு வரும். அதை நம்பி நிச்சயம் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
 
 
பொதுவாக திமுகவைப் பொறுத்தவரை வேட்பாளர் மாற்றங்கள், வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பதெல்லாம் இருக்காது. ஆனால் இந்த முறை அப்படி ஆங்காங்கே நடக்கிறதே?
வேட்பாளர் மாற்றத்தைப் பொறுத்தவரை இது ஜெயலலிதாவைக் கேட்கவேண்டிய கேள்வி. 
ஏறத்தாழ நூறு வேட்பாளர்களுக்கு மேலாக, அதாவது அறிவித்த வேட்பாளர்களில் பாதி பேருக்கு மேல் மாற்றி இருக்கிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடத்துவது போன்றவை வேட்பு மனு தாக்கல் செய்தபின் சரியாகிவிடும்.
 
 
சென்னை ஒருகாலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த நிலை இடையில் மாறிவிட்டது. இந்த முறை அது சாத்தியமா?
நிச்சயமாக. வெள்ள நேரத்தில் ஜெயலலிதாவும் அதிமுகவினரும் நடந்துகொண்ட முறை மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. நிச்சயமாக திமுக சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெல்லும் என்று நம்புகிறேன்.
 
 
வெள்ள நிவாரணப் பணிகளின் சுணக்கம் காரணமாக சென்னையில் அதிருப்தி இருப்பதுபோல் தென்மாவட்டங்களிலும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி எதிரொலிக்கிறதா?
நிச்சயமாக எதிரொலிக்கிறது. எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை. புதுத் திட்டங்கள் இல்லை. கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் முடக்கி வைத்திருக்கிறது அதிமுக அரசு. ஆகவே பரவலாக தமிழமெங்கும் அதிமுக மீது அதிருப்தி இருப்பதைக் காண முடிகிறது.
 
 
இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து?
நிச்சயம் திமுக கூட்டணி வெல்லும். மக்களின் மனநிலை திமுகவிற்கு சாதகமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இருக்கும் அதிமுக ஆட்சி மேல் வெறுப்பு இருக்கிறது. செயல்படாத முதலமைச்சராக இருக்கிறார் ஜெயலலிதா. எந்தத் தொழில் முதலீட்டையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வராமல், முதலீட்டாளர்கள் மாநாடு மட்டும் நடத்தி பேனர்களுக்கும், போஸ்டர்களுக்கும் மட்டுமே செலவு செய்தது தமிழக அரசு. முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி கிட்டத்தட்ட 220 நாட்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் ஒரு ரூபாய் முதலீடு இதுவரை வரவில்லை. விவசாயிகளுக்கென்று உருப்படியான ஒரு திட்டம் கிடையாது. அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பும் இல்லை. எந்த வளர்ச்சி திட்டங்களும் கிடையாது. கட்டுமானப் பணிகள் நடைபெறவே இல்லை. சுகாதாரச் சீர்கேடுகள் அதிகம். இப்படி எல்லா துறைகளிலும் வீழ்ச்சிதான். இதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை. ஐந்தாண்டுகளாக ரேஷன் அட்டைகள் கூட அச்சடித்து வழங்கப்படவில்லை. ஜெயலலிதா அவர் வாயால் 110 விதிகளின்கீழ் சொன்ன எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மக்கள் இவற்றையெல்லாம் உணர்ந்திருக்கிறர்கள். ஆகவே திமுக கூட்டணியே வெல்லும்.
 
-கவின்மலர்
 
(மே2016 அந்திமழை இதழில் வெளியான கட்டுரை)
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...