அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்’ பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு! 0 உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் கொரோனா மூன்றாவது அலை வரும்: நீதிமன்றம் கருத்து 0 சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி 0 திமுக அடக்கமுடியாத யானை - முதல்வர் ஸ்டாலின் 0 எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்! 0 உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து! 0 தி பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் போராட்டம் 0 யூடியூப் பார்த்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளை: போலீஸ் விசாரணையில் தகவல் 0 காவலர் தாக்கியதில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! 0 போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு; சப்-இன்ஸ்பெக்டர் கைது 0 தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு 0 காவலர் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 சோதனை சாவடியில் போலீஸ் தாக்கி வியாபாரி பலி! 0 ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம் 0 தமிழக எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் ரூ. 48 லட்சம் கொள்ளை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பாராளுமன்றத்தில் கனிமொழி ஆவேசம்!

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   18 , 2019  16:05:11 IST

ஐஐடி வளாகத்தில் நிலவும் சாதி, மத பாகுபாடுகள்தான் மாணவி பாத்திமா லத்தீபின் தற்கொலைக்கு காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.  ஐஐடி வளாகத்தில் சாதி மத பாகுபாடு கடைபிடிக்கப்படுவது தொடர்பாக 78 வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை நாடாளுமன்றத்தில் அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் , கடந்த 10 ஆண்டுகளில் 52 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

 

மாணவி பாத்திமாவின் தற்கொலையில் மர்மம் இருக்கிறது என்றும் மாணவியின் பெற்றோர்  பாத்திமாவின் விடுதி அறைக்கு சென்றபோது அறை சுத்தம் செய்யப்பட்டிருந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.  தற்கொலை காரணமானவர்களின் பெயர்களை மாணவி செல்போனில் குறிப்பிட்டிருந்தபோதிலும் , அவர்கள் பெயர்களை  FIR-ல்  குறிப்பிடப்படவில்லை என்று கூறினார். 

 

இதற்கு பதிலளித்த  மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியால்,  மாணவி தற்கொலை குறித்து அறிக்கை அளிக்க கோரி சென்னை ஐஐடி-க்கு  உயர் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுகவின் வெளிநடப்பு செய்தனர்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...