அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சமஸ்கிருதம் நமது தேசிய மொழி: நடிகை கங்கனா ரனாவத்

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   30 , 2022  16:39:11 IST

இந்தியை விட கன்னடம் பழமையானது, தமிழும் மூத்தது என்று யார் தெரிவித்தாலும் அதுவும் தவறவில்லை என்றும் நடிகை கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். "தாகத்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத், 'இந்தி எங்கள் தேசிய மொழி என்று அஜய் தேவ்கன் சொல்வதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தில் பெருமை கொள்ள உரிமை உண்டு. இந்தியை தேசிய மொழியாக ஏற்க மறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது. நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்வது இதுதான் என்றால், அது உங்கள் தவறு. இந்தியை விட கன்னடம் பழமையானது, தமிழும் மூத்தது என்று ஒருவர் என்னிடம் கூறுகிறார் என்றால், அப்போது அவர்களும் தவறில்லை. சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன், இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை. ஏன் சமஸ்கிருதம் தேசிய மொழியாகவில்லை. இன்று நாம் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்துகிறோம். அதுதான் இணைப்பாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி அல்லது சமஸ்கிருதமாக இருக்க வேண்டுமா அல்லது தமிழா? எனவே, இவற்றையெல்லாம் மனதில் வைத்து, ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும், இந்தியாவிற்கு என்று தேசிய மொழி கிடையாது. இந்தியை விட தமிழ் பழமையானது என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் சமஸ்கிருதம் அதை விட பழமையான மொழி. ஒவ்வொருவருக்கும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பெருமை கொள்ள பிறப்புரிமை உள்ளது, அதில் நான் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...