???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   17 , 2018  22:20:49 IST

மத்தியப் பிரதேசத்தில் முதல்வராகப் பதவியேற்ற கமல்நாத், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
 
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனையடுத்து, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆதரவு அளித்ததையடுத்து, காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் பதவிக்காக ஜோதிராதித்ய சிந்தேவும், கமல்நாத்துக்கும் இடையே போட்டி நிலவியது.
 
கமல்நாத்தை முதல்வராக ராகுல் காந்தி தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து, திங்கள்கிழமை கமல்நாத் முதல்வராகப் பதவியேற்றார். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல்வராக பதவியேற்ற கமல்நாத் உடனடியாக, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
 
இதன்மூலம், விவசாயிகள் வாங்கியிருக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் விவசாயிகள் பிரச்னையை முக்கியப் பிரச்னையாக முன்னிறுத்தி காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. மேலும் மூன்று மாநிலங்களிலும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்ற கமல்நாத், முதல் கையெழுத்தாக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...