???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெகுண்டெழு தமிழகமே; வேறு தலைமை தேடு- கமல்ஹாசன் ஆவேசக் கடிதம்

Posted : வியாழக்கிழமை,   மே   07 , 2020  11:46:10 IST


Andhimazhai Image
தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற இடங்களில் மதுக்கடைகளை அரசு இன்று திறந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசை விமர்சித்து காட்டமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அது வருமாறு:
 
தமிழர்காள் வணக்கம்,
 
ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர்வாழும் ஆசைகூட தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்?
ஓட்டுக்குக் காசு வாங்கி 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்குக் குத்தகை விட்டோமே அதன் விளைவுதான்.
 
பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்குப் பெயர் அம்மாவின் அரசா? தாயுள்ளம் கொண்டோர் எல்லோருக்கும் அவமானமல்லவா அது?
 
இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும் வேலை இல்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு அடகுக்கடைக்குப் போகும் பின் அரசு நடத்தும் சாராயக்கடைகள் மூலம் அரசுக்கே வந்துசேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு.
 
ஓட்டுக்கு இத்தனை ஆயிரம் விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் என 5 வருடத்துக்கு ஏழைத்தமிழர்களைக் குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும் தருவாயில் வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறது. ஆண்டவர்களும் ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
 
இன்று சொல்லுகிறேன்...
 
இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால் சுனாமி கொண்டுசென்ற உயிர்களைவிட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில் அரசு இப்போது திறந்துவிட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.
அப்படி எதுவும் நடந்தால் தமிழகத்தின் தலைமை கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? 
 
சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம் கொரோனாவை விட அதிகம் தமிழ் மக்களைக் கொல்லும்.
நோய்தொற்றுக்கு தப்லிக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர வேறு யாரைக் குற்றம் சாட்ட முடியும்?
 
கிராமங்களெங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம்.
கொள்ளைநோய் ஒரு பக்கம். அரசுகளின் தொடர்கொள்ளை இன்னொரு பக்கம்.
தாங்குமா தமிழகம்?
வெகுண்டெழு தமிழகமே; வேறு தலைமை தேடு.
வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு இந்த கொள்ளையரையும் வெளியேற்ற காலம் நெருங்கிவிட்டது.
 
உங்கள் நானாகிய கமலஹாசன்
 
அரசுக்கு ஒரு சிறுகுறிப்பு:
இன்றும் தாமதமாகிவிட வில்லை. நேர்மைக் குரல்களுக்கு செவி சாய்த்தால் மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால் நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது.
உண்மையில் இது யாருக்கான அரசோ?
இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்ற ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தைக் கேட்டுச் சொல்லுங்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...