???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! 0 எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை சௌந்தர்ராஜன் 0 பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா! 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தான் தொடங்கப்போவது மூன்று தலைமுறைகளுக்கும் பயன்படும் கட்சி: கமல்ஹாசன் பெருமிதம்!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   12 , 2018  23:34:21 IST

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றிய பின்னர் லெக்சிங்டன் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்தித்தார். அப்போது  கமல்ஹாசன் பேசியதாவது: நான் என் வேலைகளை விட்டு விட்டு கடமை செய்ய வந்து இருக்கிறேன். அதேபோல் நீங்களும் கொஞ்ச நேரம் நாட்டுக்காக ஒதுக்க வேண்டும். அரசியல் கட்சி பெயர், கொடி போன்றவை வருகிற 21-ந்தேதி அறிவிக்கப்படும். உங்கள் பங்கும் அதில் இருக்க வேண்டும். இந்த அரசியல் யாரோ செய்கிறார்கள் அதில் நமக்கு என்ன வேலை என்று ஒதுங்கி இருக்காதீர்கள். சில கனவுகள் தூங்க விடாமல் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கனவுதான் நாளை நமதாக வேண்டும் என்று தமிழகத்துக்காக நான் காணும் கனவு. நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி உள்ளது. தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தரமான கல்வியால் இந்தியா உயரும். தனியார் கையில் இருக்கும் மருத்துவத்தை மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீர் வழித்தடங்களை மேம்படுத்த வேண்டும். இனிவரும் மூன்று தலைமுறைகளுக்கும் பயன்படும் சமுதாய கருவியாக இந்த கட்சி இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. நாளை நமதேயாகட்டும். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...