???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் விவகாரம்.

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2013  09:05:19 IST


Andhimazhai Image

விஸ்வரூபம் விவகாரம் குறித்து தலைமை செயலகத்தில் உள்துறை செயலர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது. கூட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள்  கோரிய 7 காட்சிகளை நீக்க நடிகர் கமலகாசன் சம்மதம் தெரிவித்தார்.

முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. இதில், உள்துறை செயலாளர், நடிகர் கமல் மற்றும் முஸ்லீம் தரப்பினர் கலந்து கொண்டனர்.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட தங்களுக்கு சம்மதம் என முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படும். கமலுக்கும் தங்களுக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் இல்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினர். இதனிடையே, விஸ்வரூபம் படத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது .இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்ந்தது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்,இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த முதல்வருக்கும். பொறுமையாக கருத்துக்களை கேட்ட உள்துறை செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். எங்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும். தடை உத்தரவும் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உடனடியாக அறிவிக்கப்படும் என கூறினார்.

மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா கூறுகையில், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்‌ளோம். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டமும் வாபஸ் பெறப்படும் என கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...