கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மாஸ்ஸான பாடலை கமல் பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர். பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் பாடல் தற்போது ஹிட்டாகி வருகிறது.
கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப். ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.
முதற்கட்டமாக கமலின் வரி மற்றும் குரலில் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
பத்தல பத்தல என தொடங்கும் பாடல் சென்னையின் பூர்வீக மொழியில், ஒன்னாம் நம்பர் சொக்கா திருடி பிளேட் பக்கிரி மாமே... அது சரக்கடிக்கும் சோம்... இது சுண்டி சோறு தீனு.. என செல்கிறது.
மேலும், இந்த பாடலில் ''ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... ''என்று மத்திய அரசையும் கமல் சீண்டியுள்ளார்.