???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8,78,254 ஆக அதிகரிப்பு 0 தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது 0 இந்தியா உண்மையாகவே நல்ல நிலையில் உள்ளதா? ராகுல் காந்தி கேள்வி 0 பள்ளி மாணவா்களுக்கு காணொலி பாடங்களை பதிவேற்றித் தர உத்தரவு 0 அரசு பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை தொடரும் 0 இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம் 0 மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு 0 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டலத்தில் 96.17% பேர் தேர்ச்சி 0 நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  22:04:20 IST

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறிய கருத்தை நான் வழிமொழிகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘படவாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதலமைச்சர் அவரது விரும்பங்களைத் தெரிவிக்கிறார். தொடர்ந்து சொல்லி கொண்டு இருப்பதால் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்பது அவர்கள் கருத்து.

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழியில்லை. நல்ல தலைமைக்கு ஆள் இல்லை என்பது தான் வெற்றிடம். நல்ல தலைமை இருந்தார்கள் என்பதில் பொய் இல்லை என்பதை மறுக்க முடியாது. இன்று இல்லை என்று சொல்வதற்கு வருத்தப்பட்டு பிரஜோனம் இல்லை. நல்லவர்கள், வல்லமையர்கள் தலைமை ஏற்றாலும் பிசகுகள் நடக்காமல் இருக்காது. அதற்கு விமர்சனங்கள் வந்தே தீரும். அதை ஏற்று கொள்ளும் தன்மை பழைய தலைவர்களுக்கு இருந்தது. நவீன தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். இது, ஜனநாயகத்தின் பங்காளியாக என்னுடைய கருத்து’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...