???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன்: கமல்ஹாசன்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   27 , 2017  00:21:10 IST

எந்தவித பேதமும் இன்றி அனைத்து கட்சிகளின் ஊழல்களையும் தெரிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஊழல் குறித்த தன் குற்றச்சாட்டில் அனைத்து கட்சிகளையும் விமர்சிப்பதில்லை என பிறர் கூறுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தான் நட்புறவு பாராமல் அனைத்துக் கட்சியின் ஊழல்களை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் ஊழல்களை தெரியப்படுத்துவது தனது கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள், கமல்ஹாசன் திமுக போன்ற கட்சிகளின் ஊழல் குறித்து பேசாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் கமல்ஹாசனை பின்னால் இருந்து இயக்குவது திமுக தான் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் இந்த டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...