???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  23:26:42 IST

மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இதில், வெற்றி பெற்றாலும், 3 மாநிலங்களிலும் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் சிக்கல் நீடித்தது.
 
ராஜஸ்தானில், சச்சின் பைலட், அசோக் கெலாட்டுக்கும் இடையேவும், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல், டி.எஸ்.சிங் தியோ, தம்ராத்வாஜ் சாஹூ ஆகியோருக்கும் இடையே போட்டி நிலவியது. மத்திய பிரதேசத்திலும் மூத்த தலைவர் கமல்நாத், மற்றும் இளம் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியா ஆகிய இருவரும் முதல்வர் போட்டியில் இருந்தனர்.
 
இந்நிலையில், நேற்று மாலை கமல் நாத் மற்றும் சிந்தியா ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும், ப்ரியங்கா காந்தியும் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின் இருவருடனும், தான் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, பொறுமையும், காலமுமே சக்திவாய்ந்த போர்வீரர்கள் என்ற லியோ டால்ஸ்டாயின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்தார்.
 
தொடர்ந்து போபால் வந்த கமல்நாத் நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றார். ஜோதி ராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, திக்விஜய் சிங் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலமைச்சர் பதவிக்கு கமல்நாத் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மத்திய பிரதேசத்தில் புதிய சகாப்தம் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
9 முறை எம்.பி.யாக இருந்த கமல்நாத் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 72 வயதான இவர் மீது 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்ற 3 மாநிலங்களில் ஒன்றில் முதலமைச்சர் பதவி விவகாரம் முற்று பெற்ற நிலையில், மற்ற 2 மாநிலங்களில் முதலமைச்சரை தேர்வில் சமரசத்தை உண்டாக்கும் பொறுப்பில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...