???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல் விரும்பினால் கர்நாடகாவில் குடியேறலாம் - கர்நாடக துணை முதல்வர்.

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2013  01:56:25 IST

கமலஹாசன் விஸ்வரூபம் படம் தற்சமயம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.இதனால் மிகவும் வருத்தமடைந்த நடிகர் கமலஹாசன் ”தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி மதச்சார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்று உருக்கமாக பேட்டியளித்திருந்தார்.

 

குடியேற எந்த மாநிலமும் கிடைக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி மத சார்பற்ற நாட்டில் குடியேறுவேன் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் ஆர்.அசோக்  நிருபர்களிடம் பேசியபோது ”விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்து இருப்பது ஏற்புடையது அல்ல. மன வேதனையில் தான் அவர் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியுள்ளார். அவர் எங்கும் செல்ல வேண்டாம். கர்நாடகாவில் குடியேற அவருக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார்

 

மேலும் ஆந்திர மாநில பாரதீய ஜனதா தலைவர் கிஷன் ரெட்டியும் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, விஸ்வரூபம் படம் எந்த மதத்தலைவர்களுக்கும் எதிராக இல்லை. நாட்டை அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிராகத் தான் படம் உள்ளது. உலக தரத்துக்கு அப்படத்தை கமலஹாசன் எடுத்துள்ளார். அவர் தென் இந்தியாவில் பிறந்து உள்ளார் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். ஒரு இந்தியர் இந்த சாதனையை படைத்துள்ளார் என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். எந்த காட்சியையும் வெட்டாமல் படத்தை முழுமையாக வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...