???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை திரும்பினார் கமல், இன்று மதியம் முத்தரப்பு பேச்சுவார்த்தை.

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2013  03:30:13 IST


Andhimazhai Image

‘விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க கமல்ஹாசன் இன்று மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் ராஜகோபால் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. கமல் தரப்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், இயக்குனர் அமீர் பங்கேற்றனர். முஸ்லிம் அமைப்புகள் சார்பில் 15 பிரதிநிதிகள் பங்கேற்பதாக கூறினர். அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஆனால் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கமல் பங்கேற்க வேண்டும் என்று முஸ்லிம் பிரதிநிதிகள் கூறியதால், கமல் இன்று காலை மும்பையில் இருந்து கிளம்பி மதியம் 12 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அங்கு நிருபர்களிடம் பேசுகையில், ‘வட மாநிலங்களில் விஸ்வரூபம் படத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது என்று உற்சாகமாக சொன்னார். பின்னர் அவர் தனது அலுவலகத்துக்கு சென்றார்.இந்நிலையில் இன்று பிற்பகல் நடக்கும் அரசு,முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தில் கமல் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நேற்று பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள், ‘விஸ்வரூபம்’ படத்தில் குரான் படிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட இன்னும் பிற காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே கமலிடம் தெரிவித்திருப்பதாக கூறினர். இன்று பிற்பகல் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது என்னென்ன காட்சிகளை நீக்க வேண்டும் என்பது பற்றிய பட்டியலை அவர்கள் கமலிடம் தர உள்ளனர். அதன்படி சில காட்சிகளை நீக்க வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் சுமூக முடிவு ஏற்பட்டால் ஓரிரு நாளில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...