???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை 0 ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு 0 எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை! 0 ஓரினச் சேர்க்கைக்கு எதிரான குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! 0 உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே 0 ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் 0 புலன் மயக்கம் - 93 - ஏன் அவர் மேஸ்ட்ரோ [பகுதி-3] இசைவழி முத்தங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 தென்மாநிலங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 0 பினாமி வீடுகளில் வருமானவரி சோதனை: முதலமைச்சர் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: 18 பேர் கைது 0 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது! 0 நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன: குலாம்நபி ஆசாத் 0 46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் தகவல் 0 ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு புகாரை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல்ஹாசன் - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   21 , 2017  07:40:46 IST


Andhimazhai Image

சென்னையில் இன்று நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

 

தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக டுவிட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மக்களிடமிருந்து அழைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல் ஹாசனை சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்;  டெல்லி முதல்வர் கெஜரிவால் என்னை சந்தித்தது எனக்கு பெரிய பாக்கியம் என்று கூறினார். ஊழலுக்கு எதிரானவர்கள் எல்லோரும் எனக்கு உறவினர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலிடம் இருந்து தாம் கற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளதாக வெளிப்படையாகக் கமல் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியாளர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது:

 

நான் கமல்ஹாசனின் மிகபெரிய ரசிகன். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நேர்மையாக உள்ளனர். அரசியலில் இருவரும் இணைந்து செயலாற்றுவது குறித்தும் விவாதித்தோம். நேர்மைக்கும், துணிவுக்கும் பேர் போனவர் கமல்ஹாசன். இந்த நாடு பெரும் ஊழலையும் வகுப்புவாதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இந்த இரு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்துள்ளோம். நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வகுப்புவாதத்தை எதிர்க்கின்றனர். கமல் அரசியலுக்கு வரவேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

 

இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்  கருதப்படுகிறது.


English Summary
Arwind Kejriwal invites Kamal Hassan to join in Politics.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...