அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இசை பயிலும் செலவை ஏற்றார் கமல்ஹாசன்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   23 , 2022  06:57:55 IST

பத்தல பத்தல பாடலை தன்னுடைய குரலில் பாடி வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளி திரு மூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டினார் கமல்ஹாசன். மேலும் திருமூர்த்தி இசை பயிற்சி பெறுவதற்கான செலவையும் ஏற்றுக் கொண்டார்.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் சூப்பர் ஹிட்டானது.
 
இந்தப் பாடலை சமீபத்தில் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி திருமூர்த்தி தன்னுடைய குரலில் பாடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
 
இந்தநிலையில் திருமூர்த்தியை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். அத்துடன் சிறந்த இசைக் கலைஞராக உருவாக வேண்டும் என்ற திருமூர்த்தியின் கனவை நிறைவேற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசைப்பள்ளியில் அவர் பயிற்சி பெற உதவி செய்து உள்ளார். அதற்காக ஏ.ஆர் ரகுமானிடமும்  பேசியுள்ளார்.
 
அத்துடன் திருமூர்த்தி இசை பயில்வதற்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் நடிகர் கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தியின் பல பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.
 
அதைப்பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய இசையில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்கியிருந்தார். இந்த நிலையில் சிறந்த இசைக் கலைஞராக உருவாக ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் பயிற்சி பெற உள்ளார் திருமூர்த்தி.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...