”எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தான்” என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் எனவும் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 90 சதவீத வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஐயா வைகுண்டர் அவதார தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், சமத்துவ மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்றார். மேலும் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியானது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். அவருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.