???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தோல்விக்கெல்லாம் பயந்துவிட்டால் அது வாழ்க்கை அல்ல!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   07 , 2017  01:44:17 IST


Andhimazhai Image
Man is a genius when he is dreaming என்ற அகிரா குரசோவாவின் வார்த்தைகள் கமலின் வாழ்வோடு பொருந்திப் போகிற ஒன்றாக இருக்கிறது. அறுபதாவது அகவையில் நுழையும் கமலின் முன் கதைச்சுருக்கம் அவரது வார்த்தைகளில் இங்கே:
 
 
“எங்கப்பாவுக்கு ஐம்பது வயது நான் பிறக்கும் போது. சாருஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு வித்தியாசமான உறவு. அவருடைய முதல் மகனும் , நானும் கிட்டத்தட்ட மூன்று மாத வித்தியாசத்தில் பிறந்தோம் என்று நினைக்கிறேன். அதனால் என்னுடைய உண்மையான தந்தை உருவம்னு சொல்லக்கூடியது வந்து மிஸ்டர் சாருஹாசனும் , சந்திரஹாசனும்தான் . அவருக்கு இருபத்து நாலு வயசு. இவருக்கு பதினெட்டு வயது நான் பிறக்கும்போது. அம்மாவும், அப்பாவும் எனக்கு தாத்தா பாட்டி மாதிரி தான் தெரியுறாங்க. அதுதான் நிஜமும் கூட. எல்லாமே எனக்கு ரெண்டு மடங்கு அன்பாக கிடைத்தது. 
 
 
 
களத்தூர் கண்ணம்மா காலத்துல சினிமா உலகம் எனக்கு ஒரு தீம்பார்க் மாதிரிதான் இருந்தது. அற்புதமான மாயாபஜார். அங்க நான் ஜாலியா , சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன். அதை சினிமா கற்ற காலமாக எடை போட முடியாது. வெளியில் எல்லோரும் படித்து, வேலை தேடி, வேலை பார்த்துக் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கும்போது இங்கே எல்லோரும் மகிழ்ச்சியா இருக்கிறதா நினைச்சேன். 
 
சின்னக் குழந்தையாகவும் இல்லாம, பெரிய ஆளாகவும் இல்லாம சில காலம் நடுவிலே அகப்பட்டுத் திண்டாடினேன். பிறகு கொஞ்சநாள் வேண்டாவெறுப்பா ஸ்கூல் போனேன். 7 வது படிக்கும்போது முகமில்லாத, விலாசமில்லாத ஒருவனாக இருந்தேன். களத்தூர் கண்ணம்மா முகமும் போயாச்சு. ஆனாலும் மனது புகழ்வெளிச்சத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் சண்முகம் அண்ணாச்சி நாடகக் குழுவில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பாவின் ஆசை டிராமாவிலே நடிச்சுக்கிட்டிருந்தேன். நாடகக் குழுவில் நான் சேர்ந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் அதற்கு மூடுவிழா நடத்திவிட்டனர். 
 
மறுபடியும் ஸ்கூல்ல சேத்து விட்டாங்க.
 
 
சோகமான மாணவனா திரிஞ்சிட்டிருந்தேன் . வீட்ல பாத்து பாவப்பட்டு, ஏண்டா ஒரு மாதிரி பேஸ்தா திரியுறே, டான்ஸ் கத்துக்கிறியான்னாங்க. சரின்னு தலையாட்டினேன். மறுபடியும் படிப்புக்கு முழுக்கு. அம்மாவும் அப்பாவும் என்னை  தனியாக மெட்ராஸக்கு அனுப்பிவச்சாங்க.
எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பாமிலி ஹவுஸிலே, மாடியிலே ஒரு ரூம் இருக்கு. ரொம்ப ஸெண்டிமெண்ட்டல் ரூம் என்னைப் பொறுத்தவரை. 
 
 
அந்த ரூமிலே பாத்ரூம் எல்லாம் கிடையாது. மத்த இடத்தையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு என்னைத் தனியாக விட்டுட்டாங்க. நான் அப்படியாவது கத்துக் கணும். உலக வாழ்க்கையை புரிஞ்சுக்கணும்னு சொல்லி தே வாண்ட்டட் மீ டு லேர்ன். பத்தாம் தேதிக்குள் அவங்க அனுப்புற பணம்,செலவழிஞ்சிடும். பணத்திற்கு ட்ரபிள். எங்க வீட்டு பில்டிங்கிலே பல கடைகள் இருக்கு. எல்லாக் கடைக்காரங்க கிட்டேயும் ரொம்ப ஸ்டிரிக்டான இன்ஸ்ட்ரக்ஷன்ஸ். நான் யாரைப் பணம் கேட்டாலும் கடன் கொடுக்கவே கூடாதுன்னு. ஒருத்தனும் தரமாட்டான். என்ன பண்றதுன்னு தெரியாது. பீடி குடிச்சா பசி அடங்கும்னு சொன்னாங்க. பீடி குடிச்சிப் பார்த்தேன். இருமல்தான் வந்தது. இருமலோடு சேர்ந்து பசியும் இருக்கிறது. வெறும் பசியே பரவாயில்லைன்னு முடிவு பண்ணினேன். பீடியை ஸ்டாப் பண்ணினேன். 
 
 
என்னுடைய முதல் காதல் சென்னையில் ஒரு மகாராஷ்டிரா பொண்ணு மேல வந்தது. நான் அவளைக் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும். நான் காதலிக்கிறது அந்த பொண்ணுக்குத் தெரியாது. எங்க வீட்டில் எல்லோருக்கும் தெரியும். சிரிப்பாங்க, இல்லன்னா முறைப்பாங்க. ஆனால் நான் தீவிரமா காதலித்தேன். ஆனால் 15 வயசுல அந்தப் பொண்ணு கான்சர்ல இறந்துட்டா. அவள் ஒரு மிக அருமையான டான்சர். எனக்கு காதல் பற்றி சோகமா நினைக்கவும் எழுதவும் தேவையான வேதனையை உணர்ச்சியை இந்த சம்பவம் கொடுத்துச்சு. என்னை அதிகமா உணர்வுவயப் படறவனா மாத்துச்சு. என்னுடைய படங்களில் இந்த காதலின் சோகப் பகுதி தொடர்ந்து பிரதிபலித்துக்கொண்டே இருந்தது. 
 
 
யாரும் செய்யாத ஒண்ணை நாம செய்யணுங்கிற ஆசையிலேதான் டான்ஸ் கத்துக்கிட்டு பிரபல டான்ஸ் டைரக்டர் தங்கப்பன்கிட்டே அஸிஸ்டெண்ட் டைரக்டரா மறுபடியும் பட உலகத்திலே நுழைஞ்சேன். அப்புறம் ஆர்.சி.சக்தியோட நட்பு. என்னிடம் கதை சொல்லும் திறன் இருப்பதாக அவர் சொன்னார். அவருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படத்துக்கு உணர்ச்சிகள் என்ற தலைப்பை நான் வைத்தேன். ஆனால் அந்தப்படத்தில் நடிக்க யாருமே வரவில்லை. அதனால் ரொம்ப சங்கோஜத்துடன் நாணிக்கோணி அந்தப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
உணர்ச்சிகள் வளரவே இல்லை. படத்தைச் சொல்றேன் . அந்தச் சமயத்தில் பாலசந்தர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள். என் அம்மா கூட நல்ல போட்டோ ஒண்ணு எடுத்துட்டுப் போடான்னாங்க. அதெல்லாம் எதுக்கும்மா. அது நடிகனாகணும்னு நினைக்கிற  சாதாரண ஆளுங்க செய்ற வேலை. என்னை அதுக்குக் கூப்பிட்டிருக்க மாட்டாங்க. பாலச்சந்தருக்கு ஒரு நல்ல அசிஸ்டெண்ட்  டைரக்டர் தேவைப்படுதுன்னு நெனைக்கிறேன். அதான் கூப்பிடறாகன்னு சொல்லிட்டுப் போனேன். அங்க போய்ப் பாத்தா போட்டோ கொடுங்கன்னாங்க. எந்த ரோல் வந்தாலும் ஏற்றுக்கொண்டு ஒரு ‘நல்ல நடிகன்’னு பேர் வாங்கணும் என்பது தான் என் லட்சியம். டைரக்டர் பாலசந்தர் கூட எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். ‘இதே மாதிரி ‘ரேப்’ பண்ற ரோலா உனக்குக் கொடுப்பாங்க. காலையிலே ஒரு செட்டிலே பிரமீளா ,சாயங்காலம் இன்னொடு செட்டிலே ஜெயசுதா, அப்படின்னு...! ரேப் பண்ற ஸீனாவே நடிச்சு இதை ‘ கண்டினியூ’ பண்ணாதே. அதுக்குன்னு வில்லன் ரோல் வந்தா வேண்டாம்னும் சொல்லாதே ! நல்லா வந்தா விடாதே’ன்னு சொல்லியிருக்கிறாரு.
 
 
யோசிச்சு பார்த்தா நான் ஒரு இலக்கியவாதியாகத்தான் வந்திருக்கணும். ஏன் வரலைன்னு சொன்னா சிரிப்பீங்க. எனக்கு எழுதணும்னு நிறைய ஆசை. ஆர்.சி.சக்தி என்னுடைய கதை சொல்ற முறையைப் பார்த்து வியப்பாரு. நான் நினைச்சேன். என் மீதான நட்புலதான் அவரு பாராட்டுறாருன்னு , ஒரு மயக்கம்னு நெனச்சேன். ‘ஏன் எழுத மாட்டேன்ற ’ ன்னு கேட்டாரு. ‘தமிழ்ல பிழை இருக்கும். அதைவிட கையெழுத்து நல்லா இருக்காது’ன்னு சொன்னேன். ‘மொழி ஒரு கருவி . நீ சொல்ல வர்ற விஷயத்தை சொல்றதுக்கு ஒரு குறிப்பு. அவ்வளவு தான் எழுதுன்னார். 40 பக்க நோட்டு ஒன்னு வாங்கிக் கொடுத்து எழுதுன்னார். அதுக்கு முன்னே ஒரு டைரி வைச்சிருப்பேன். அதை யார்ட்டயும்  காட்ட மாட்டேன்.  17 வயசுன்னு நினைக்கிறேன்  அப்பத்தான் திடீர்னு ஒரு சூடு பிடிச்சது.  ’நினைவுகள்’ னு ஒரு குறுங்கதை எழுதி காண்பித்தேன். அதற்கப்புறம் 20 வயசில ‘ஒட்டுதல்’னு ஒரு கதை எழுதினேன். 23 வயசானப்புறம்தான் அந்தக் கதை பப்ளிஷ் ஆச்சு. 
 
 
சிலரது பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. நியாயமான பணிவுடன் சில எழுத்தாளர்களை உபசரித்து ‘சினிமாவுக்கு வாருங்கள்’ என்று கூப்பிட்டிருக்கிறேன். வெகு சிலரே வந்திருக்கிறார்கள். மற்ற சிலர்  இங்கு வந்தால் அசிங்கம் என்றிருக்கிறார்கள். சிலர் வெட்கப்படுவார்கள். அதில் ஏனோ சிலருக்குப் பாகவர்த்தனமிருக்கிறது. ‘இந்த மேடையில் பாட மாட்டேன்’ என்கிற மாதிரி.
அதற்குக் காரணம் கோடம்பாக்கத்தைப் பற்றி பத்திரிகைகள் எழுதும் எழுத்தாக இருக்கலாம். எங்களுடைய நடத்தையாகவும் இருக்கலாம். எதனால் என்று தெரியவில்லை. ஆனால் அதெல்லாம் மாற வேண்டும். அவர்கள் சினிமாவிற்கான உரிமையைத் தரத் தயங்கினால் அது வேறு ஏதோ ஒரு விதத்தில் சினிமாவுக்குள் வரும். நேரடியாக முன்வந்து அளித்தால் கதைக்கான ‘ராயல்டி’யாவது வரும். தராமல் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டால் அது பொதுச் சொத்தாகிவிடும்.
 
 
சினிமா  காட்டுமிராண்டித்தனமான பூதம் மாதிரி வளர்ந்ததற்குக் காரணம் திறமையுள்ள பலர் அதில் வந்து சேர யோசித்துக் கொண்டிருந்ததுதான். அறிவுஜீவிகள் சினிமாவைப் பார்த்திருக்கிறார்கள் என்றால்  நிறைய சாதனைகளை இங்கு உருவாக்கியிருக்க முடியும். ஜெயகாந்தன் சினிமாத்துறைக்கு வந்து விட்டுச் சீக்கிரமே போய் விட்டார். ஏதோ கோபமிருந்திருக்கலாம். வர்த்தக மொழியைப் பேசிக்கொண்டிருக்க அவருக்கு பொறுமை கிடையாது.
 
 
ஜெயபாரதியை, ருத்ரய்யாவைக் கேளுங்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஊக்கியாக இருந்திருக்கிறேன். நானும், அனந்துவும் தூதர்களாக இருந்திருக்கிறோம். அந்த தோல்விக்கெல்லாம் பயந்து போய்விட்டால் அது வாழ்க்கையாகாது. அடுத்த வேளை உணவு உட்கொள்ளாமல் மலச்சிக்கல் காரணம் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சாப்பிடும்போது அசிங்கமாக அதைப் பற்றி பேசுகிறீர்களே என்று நீங்கள் சொன்னால் இரண்டுமே தொடர்புடைய விஷயங்கள்தானே , வியாபாரம் அசிங்கம் என்று ஏன் ஒதுங்கிப் போகிறீர்கள் ? ஏன் நீங்கள் போராடக்கூடாது?
 
 
என்னோட ஆரம்பகால சினிமா பிசைதலுக்கு இசைதல் தான். இப்ப நான் மாறியிருந்தாலும் வணிக சினிமாவையும், மாற்று சினிமாவையும் போட்டு குழப்பிக்ககூடாதுன்னு நினைக்கிறேன். சினிமா வியாபாரம் தான். இதை மாற்றணும்னா வேற ஒரு அரங்கம் வைக்கணும். கமர்ஷியல் வெற்றின்னு சொன்னீங்கன்னா அதில் 2 வகை இருக்கு. 16 வயதினிலே வெற்றிப்படம். ஆனா அந்தப் படத்தை மிகப்பெரிய இமாலய வெற்றின்னு விநியோகஸ்தர்கள் ஒத்துக்கறதில்லே, வாரம் 25 ஓடியும். கேட்கும் போது எனக்குக் கோபமாக வருது. ‘பாலசந்தர், பாரதிராஜா அற்புதமான டைரக்டர்ஸ் . ஆனா கிராமத்திலே அவங்க அவ்வளவா வெற்றிகரமாக ஓடலே’ அப்படீங்கறாங்க டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் . கேட்கறதுக்கே கஷ்டமாயிருக்கு. அது மாதிரி, படங்களில் 10 சதவிகிதமே புத்திசாலித்தனம் உள்ள படங்கள் நல்லா வசூல் பண்ணுதுங்கிறது அவங்களுடைய வாதம். 80 லேயிருந்து 90 சதவிகிதம் வெற்றியைத் தொடர்ந்து கொடுத்தவங்கன்னு இங்கே சொல்லணும்னா தேவர் பிலிம்சைத்தான் சொல்லணும்.இன்னொருவரைச் சொல்லணும்னா எஸ்.எஸ்.வாசன்.
நான் சின்னப் பையனா இருக்கும்பொழுது சிவாஜி சாரை நேர்காணல் பண்ணியிருக்கிறேன். தங்கச்சுரங்கம்னு ஒரு படம் பண்ணியிருப்பார். அதுல எம்.ஜி.ஆர். சார் மாதிரி கண்ணாடி போட்டுக்கிட்டு. தொப்பி போட்டுக்கிட்டு கிணத்துல எறங்கி பாட்டுப் பாடுவாரு. ‘அந்தக் கெணத்துல ஏன்னே விழுந்தீங்க’ன்னு கேட்டேன். அப்படியே பார்த்துக்குவாரு. வேற யாரும் அவ்வளவு அதிகப்பிரசங் கித்தனமா கேள்வி கேட்கமுடியாது. நான் அவரு மடியில உட்கார்ந்து வளர்ந்த பையன்றதால வெளியே போன்னு சொல்லாம என்னைப் பொறுத்துக்கிட்டாரு. அப்ப அவரு ‘அந்த மாதிரி கெணறு வரும். நீயும் விழுவ’ன்னு சொன்னாரு. அதான் சகலகலா வல்லவன். பெரிய வெற்றி. சிவாஜிக்கு தங்கச்சுரங்கம் வெற்றியில்ல. அது இன்னும் பாழுங்கெணறா போனதுக்குக் காரணம் படம் தோத்ததுதான். வெற்றியாயிருந்தா தோண்டி வச்ச ஊத்துல விழுந்துட்டேன். சந்தோஷமாத்தான் இருக்கேன்னு சொல்லியிருப்பார்.
 
 
உலக சினிமாவைப் பத்திப் பேசும்போது, நாம கிட்ட இருந்து பேசுறதால சில குறைங்க தெரியும். ஏன்னு பார்த்தோம்னா அது எல்லாத்துக்கும் பொருந்தும். இந்திய அரசியலுக்கும் பொருந்தும். இந்தியக் கவிதைக்கும் பொருந்தும். இந்திய இலக்கியத்துக்கும் பொருந்தும். பெரிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் சில பத்திரிகையில் எழுதணும்ற ஆசையில தன்னை சுருக்கிக் கொண்டது உண்டு. அதைத்தான் சிவாஜி பண்ணாரு.
 
The more ethnic you are, the more international you become.  சினிமாவில் ஆர்வம் வேணும். அதனோட வணிகத்தில் ஆர்வம் வேணும். அதை குதிரைப் பந்தயமாகவோ,  அரிசி மண்டியாகவோ நினைக்கக்கூடாது. அங்கே உயிரற்ற பண்டங்களை விப்பாங்க.
 
 
சினிமா வேறமாதிரி. அது ஒரே மாதிரி  இருந்தா ஜனங்க கண்டுபுடிச்சிடுவாங்க. அவங்களுக்கு மாறுதல் வேணும். அதை கலைஞர்கள்தான் தரமுடியும். வியாபாரத்தை வியாபாரிகளிடமும் கலையை கலைஞர்களிடமும் விட்றணும்.  இவங்க ஒவ்வொருத்தரும் எப்படி வேலை செய்றாங்கண்ணு இவங்க ரெண்டுபேருமே தெரிஞ்சிகிடணும். பல்வேறு வகையான சினிமா வளர உதவி செய்யணும். மிக்ஸ் பண்ணக் கூடாது. ஒரு படத்துல எத்தனை பாட்டு இருக்கு, எத்தனை சண்டை இருக்குன்னு கேக்கறதை விட்டு இந்த இண்டஸ்ட்ரி விலகணும். நாடகத்துறையில் இப்படி கேக்கறது இல்லை. திரைத்துறையில் தொடர்பு இல்லாதவர்களுக்கு அதிகாரம் இருந்தாதான் இது நடக்கும்.
 
 
பணம் சம்பாதிக்கத்தான் இதில் இருக்கிறேன். ஆனால் என் விஷயத்தில் என் தொழிலும் ( profession) ஈடுபாடும் (passion) ஒரே விஷயமாக இணைந்துவிட்டன.  அதனால் தான் சினிமாவில் இருக்கிறேன். ஐ வாண்ட் டு பி ஹியர்ட் என்ற துடிப்பினால்தான் நான் முதலில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன்.  அப்புறம் நாட்டியமாட ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது. ம்ஹீம்... ரொம்பக் கொஞ்சம் பேருக்குத்தான் என்னைத் தெரிகிறது. ஐ காட் ஸ்டிரக். உடனே சினிமாவுக்கு வந்தேன்.  சினிமாவுக்கு நான் வந்தபோதும் அஸிஸ்டெண்ட் டைரக்டராகத்தான் ஆரம்பித்தேன். அப்புறம் தெரிந்தது . டைரக்டராக இருந்தால் தெரிய மாட்டேன். அதனால் நடிகனாகிவிட்டேன்.
பல நல்ல படங்களை எடுத்திருக்கிற ஜி.வி.ஐயர் ‘வணிக சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி எங்க கட்சியில் இருக்கும் ஆள் புகுந்திட்டீங்க. உள்ளேயே  இருங்கள். கர்ப்பத்தில் போட்டுட்டோம்’ என்று சொல்வார்.
 
 
ஹே ராமிற்காக ஊட்டியில நாங்க பிர்லா ஹவுஸ் செட்டு போட்டு படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருந்தோம். பயங்கர குளிர்! ராத்திரி - பகல்ன்னு பார்க்காம உழைச்சுக்கிட்டிருக்கும்போது மைசூரிலிருந்து வந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் எல்லாம் கால்ஷீட் முடியப்போகுது, சீக்கிரமா காட்சியை எடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ப்ராப்ளம் என்னன்னா, நான் பேசற ‘சொல்ப’ கன்னடம் அவுங்களுக்குப் புரியல. அதனால படப்பிடிப்பும் தள்ளி போயிட்டே இருந்தது. அப்பத்தான்... ஏதோ ஒரு ஆண் குரல் சுத்த கன்னடத்தில் அந்த காட்சியை மைக்கில் (ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ்  நூறு பேருக்கு மேலே இருந்தாங்க!) விளக்கி கொண்டிருந்தது. ‘ யாருப்பா அது டைரக்டர் இருக்கும்போது ....’ ன்னு நான் எதிர் மைக்கில் சத்தம் போட ‘நான் தான் கிரிஷ் கர்னாடடுன்னார்ரு. கர்னாடை ஏதோ ’ காதலன்’ படத்துல வந்த அப்பாதானே என்று சாதாரணமா தமிழ் மக்கள் நினைச்சிடக் கூடாது. அவர் கன்னட சினிமாவுக்கு ஒரு மைல் கல். திறமைசாலியான  நடிகர், டைரக்டர், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்... அப்படிப்பட்டவர் என் படத்துல ஒரு உதவி இயக்குநர்  வேலையை தானா இழுத்துப் போட்டுக்கிட்டு செய்த போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது!
 
 
எனக்கு அரசியல் ஆசைகள் இல்லை. ஆனால் எனக்கு ஒரு அரசியலிருக்கிறது. அது தனிப்பட்டது. மதமும் பாலுறவைப் போல் தனிப்பட்டது. வீட்டோடு இருக்கவேண்டும். வெளியே காட்டக் கூடாது. நேத்து உங்க செக்ஸ் உறவு எப்படி இருந்துச்சு, என்ன மாதிரி செக்ஸ் உங்களுக்குப் பிடிக்கும்னு நாம் எப்படிக் கேட்க முடியாதோ அதே போல என்ன சாதி நீங்க, எந்த கடவுளை நீங்க கும்பிடறீங்க இதெல்லாம் கேட்கக் கூடாது. இதுபோன்ற மதச்சார்பற்ற சமூகத்தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்.
 
 
எந்தவொரு அரசியல் கட்சியிலும் ஏன் நான் சேரவில்லை என்பதற்கான பதிலை மக்களே சொல்வார்கள். நான் எல்லாக் கட்சிகளையும் கெட்டவை என்று சொல்லவில்லை. மகாநதியில் ஒரு வசனம் வரும் .‘சும்மா சும்மா அரசியல்வாதிகளைத் திட்டிக்கிட்டிருக்காதீங்க. நீ சினிமாவை முதல் வாரத்திலேயே பார்க்கணும்கிறதுக்காக ’பிளாக்’கில் டிக்கெட் வாங்கலை? ட்ரெய்னில் டி.டி.ஆரிடம் மறைமுகமாக பர்த் வாங்கலை? அப்படின்னா நீ திருடந்தானே’. அதே மாதிரி எந்த அரசியல்வாதியும் தேவலோகத்திலிருந்து வரவில்லையே. மக்கள் வசிக்கிற தெருவிலிருந்துதானே வருகிறார்கள். மக்கள் மோசமாக இருந்தால் திருடன் தானே தலைவனாக வர முடியும். நல்லவனாக முதலில் இருந்து பிறகு சத்தம் போட வேண்டும். ஒருத்தருடைய தனிப்பட்ட தகுதி நேர்மை இரண்டையும் வைத்தல்லவா தலைவனுக்குரிய தலைமையைத் தீர்மானிக்க வேண்டும்?என்னுடைய சினிமா , என்னுடைய திரைக்கதை ஆகியவற்றில் நான் ஒழுங்காக இருக்கிறேனா என்பது மிகமுக்கியம்.
 
 
ஏராளமான மனிதர்களின் வாழ்க்கையை நான் வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.ஒரு நடிகனாய் இருப்பதில் எனக்குள்ள அனுகூலம் இதுதான். அவர்களுக்குள்ள பிரச்னைகளை அனுபவிக்காமலே! ஐ ஹாவ் தட் எக்ஸ்பீரியன்ஸ் வித்தவுட் கான்ஸிக்வன்ஸ். அது நிச்சயம் கமல் என்ற மனிதனுக்கு பயனுள்ளது தான்.
 
 
பெரும் கனவுகளோடு நான் திரையுலகிற்குள் நுழைந்த போது நான் திட்டமிட்டிருந்ததில் பாதியைக் கூட இன்னும் செய்யவில்லை. என் நேரம் குறைவு, செய்ய வேண்டிய வேலை அதிகம்.என்னை விஞ்ச வேண்டியது அடுத்த தலைமுறையின் கடமை. அதை செய்ய அவர்கள் தவறக்கூடாது. அவர்கள் விஞ்சவிடாமல் தடுப்பது துரோகம். அப்படி விஞ்சுவதற்கான எல்லா உதவிகளும் செய்ய வேண்டும். பழைய ஸ்போர்ட்ஸ்மேன் கோச்சாக மாறுகிறார்கள். அதுதான் நியாயமாக இருக்கமுடியும்.அடுத்து விளையாடுகிறவர்களை தடுத்துக்கொண்டு வித்தைகளைக்  கற்றுக்கொடுக்காமல் துரோணாச்சாரி கட்டைவிரல் கேட்கும் விஷயமெல்லாம் அரசியல். நல்ல மாணவனாக இருந்தவனால்தான் நல்ல ஆசானாக இருக்கமுடியும்.
 
 
சினிமாவின் சரித்திரத்தில் என் பெயர் ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். ஹியர் ஈஸ் சம்படி ஹூ டிட் சம்திங் சின்சியர் இன் சினிமா என்ற நினைவு இருந்தால் போதும்.அல்டிமேட்லி எந்த சிறந்த நடிகனானாலும் சரி, பத்து பன்னிரெண்டு விதங்களில்தான் நடிக்க முடியும். ஒவ்வொரு விதத்திலும் நிறையச் செய்து கொண்டிருக்கலாம். நான் என்னுடைய பத்தாவதிற்கு வந்துவிட்டேன் என்று  நினைக்கிறேன். இன்னும் மூன்று நான்கு பாக்கியிருக்கலாம். அதில் ஒரு நூறு இருநூறு படங்களைச் செய்ய முடியலாம். அந்த அலுப்பு எப்போது ஏற்படும் என்று தெரியாது. நாலு வருஷத்திலும் ஏற்படலாம். பல வருடங்களுக்கு பின்னாலும் ஏற்படலாம். ஆனால் எப்போதும் செங்குத்தான மலையில் ஏறுவது போல் நான் போய்க்கொண்டேதான் இருப்பேன். அது மேல் நோக்கியும் இருக்கலாம். பக்கவாட்டிலும் இருக்கலாம். போய்க்கொண்டே இருக்கிறேன் என்பது தான் முக்கியம்...”
 
 
நாம் கமல் போகும் பாதையில் பூக்களை கொட்டலாம் அல்லது விமர்சன முட்களை தெளிக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கை முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளை பொறியியலாளராகவோ மருத்துவராகவோ கட்டாயத்தில் உற்பத்தி செய்யத் துடிக்கும் பெற்றோர்கள் ஒரு கணம் கமலின் தந்தையை உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள்.
 
 
வெற்றியடையத் துடிப்பவர்கள் தங்கள் குறிக்கோளை நோக்கிப் போகும் போது தடைகள் வரும். உறுதியாக இருந்தால் பாலச்சந்தர், கிரிஷ்கார்னாட் போன்ற யாராவது துணைபுரிந்து கனவை நனவாக்குவார்கள். நினைவில் கொள்ளுங்கள்.! 
 
 
- அந்திமழை இளங்கோவன் -
 
அந்திமழை நவம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...