???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:28:43 IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார்.

கமலின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அவருக்கு எதிராக கரூர் மாவட்டக் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கமல் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘உங்களது பேச்சு தொடர்பாக தற்போதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதனை தள்ளுபடி செய்ய முடியாது. வேண்டுமென்றால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துகொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தினர்.

அதனையடுத்து, தற்போது, கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...