???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  23:38:31 IST

அரவக்குறிச்சி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, இந்து தீவிரவாதம் குறித்து பேசிய விவகாரத்தில் முன் ஜாமின் கோரி கமல்ஹாசன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசிய வீடியோ ஆதாரம் நீதிபதிகளிடம் காட்டப்பட்டது.

கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், ‘நான் ஏன் காந்தியை கொலை செய்தேன் என்ற கோட்சேவின் புத்தகத்தின் அடிப்படையிலேயே கமல்ஹாசன் பேசினார். கோட்சேவைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். இந்துக்களைப் பற்றி பேசவில்லை. கமல் பேசிய கருத்து, அவரது பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாகப் பகிரப்படுகிறது. வழக்குப் பதிவும் உரிய ஆவணங்களுடன் இல்லை’ என்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கருத்து தொடர்பான வழக்கில் கமலின் பதில் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர் கைது செய்யப்படலாம். கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்குப் பதிவு செய்துள்ளோம். காந்தியைக் கொன்றவர் நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று கமல் பேசவில்லை. மாறாக, உள்நோக்கத்துடன், காந்தியைக் கொன்றவர் ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார். கமலுக்கு உரிய தண்டனை வழங்கவில்லையென்றால், அவரது கட்சித் தொண்டர்களும் அதேபோல பேசுவார்கள்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ‘கோட்சைவுக்கு இந்து என்பதைத் தவிர வேறு அடையாளம் எதுவும் இல்லையா? தேர்தல் ஆணையத்துக்கு செல்ல வேண்டிய வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. கமல் பேசிய விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் விவாதங்களையும், கருத்துகளையும் பதிவிட வேண்டாம்’ என்று அறிவுரை கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...