???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'நாங்கள் எங்கேயும் ஓடிஒளியவில்லை' கல்கி பகவான் காணொளி!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   22 , 2019  10:02:38 IST

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்ததை முன்வைத்து கல்கி பகவான் ஆசிரமங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பல கோடி கணக்கான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திரா, சென்னை, கர்நாடகம் என 40 கல்கி ஆசிரமங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதற்கு பயந்து கல்கி ஆசிரம நிர்வாகிகள் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.  இந்நிலையில், இதுகுறித்து கல்கி ஆசிரம சாமியார் விஜயகுமார் இன்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அந்த காணொளியில், "நாங்கள் எங்கேயும் ஓடிஒளியவில்லை. ஆசிரமத்தில் தான் நலமாக இருக்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த பக்தர்களுக்கு நன்றி. நாங்கள் ஓடிஒளிந்துவிட்டதாக ஊடகங்கள் தான் சொல்கின்றன. அரசாங்கமோ, அதிகாரிகளோ சொல்லவில்லை" என்று விஜயகுமார் கூறியுள்ளார். 
 
எனினும், இந்த காணொளியில் அவர் வரி மோசடி, பணம் பறிமுதல் பற்றி எதுவும் சொல்லவில்லை. கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 44 கோடி ரொக்கப் பணம், 90 கிலோ தங்கம், 20 கோடி அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...