???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை நல்லடக்கம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  11:41:57 IST

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி இன்று மாலை காலமானார்.
 
கருணாநிதியுன் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும், அதைத் தொடர்ந்து சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் கருணாநிதியின் குடும்பத்தினரும், உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதனிடையே, கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய திமுக சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக கிண்டியிலுள்ள காமராஜர் நினைவிடத்துக்கு அருகில் இடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...