???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கைதி விமர்சனம்

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   26 , 2019  04:34:28 IST


Andhimazhai Image
ஜனரஞ்சக திரைப்படத்துக்கான முக்கிய அம்சங்களாக இருக்கும் நாயகி, காதல் காட்சிகள், பாடல்கள் ஆகியவை இல்லை. மாறாக பரபரப்பான திரைக்கதையை மட்டும் நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் கமர்ஷியல் படம் 'கைதி'. படம் தொடங்கும்போதே இதுதான் க்ளைமாக்ஸ் என சொல்லிவிட்டுத்தான் தொடங்குகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை ஆரம்ப காட்சிகளிலேயே விளக்கிவிட்டு, அது எப்படி நடக்கப்போகிறது என்பதை மட்டும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என தைரியமாக தொடங்கியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
 
பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தனது குழுவை வைத்து திட்டமிட்டு பிடிக்கிறார் காவல்துறை அதிகாரி நரேன். பிடிபட்ட போதைப்பொருளை மீட்கவும், அதனை பிடிக்க காரணமான போலீஸாரை பழி வாங்கவும் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து கொலைவெறியுடன் தேடுகிறது போதைக்கும்பல். இந்த கொலைக்களத்தில், 10 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு காப்பகத்தில் இருக்கும் தனது மகளை காண உணர்வுப்பெருக்குடன் சென்றுகொண்டிருந்த கார்த்தி சிக்கிக்கொள்கிறார். இதுபோதாதென பிடிபட்ட தமது கூட்டாளிகளை மீட்க கமிஷனர் அலுவலகம் செல்கிறது போதைக்கும்பலின் ஒரு பிரிவு. அங்கு சில அப்பாவி இளைஞர்கள் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இப்படியாக மாறி மாறி சுழலும் திரைக்கதையில் யார் யார் மீண்டார்கள், அவர்களுக்கு நாயகன் கார்த்தி எப்படி உதவினார், போதைக் கடத்தல் கும்பல் என்னவானது என்பதை நோக்கி கதை நகர்கிறது.
 
வழக்கமான காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாததை தவிர்த்து, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் வரையறையை மீறி படம் எந்த புதுமையையும் செய்துவிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடக்கத்தின் சில நிமிடங்களிலேயே அடுத்து படம் எதை நோக்கி நகரப்போகிறது என தெரிந்துவிட்ட கதையில், அதனை சுவாரஸ்யமாக சொல்லும் பணியை மட்டுமே இயக்குநர் செய்திருக்கிறார். சுவாரஸ்யம் இல்லாதுபோனால் 20 நிமிடங்களுக்கு மேல் படத்தில் வேலையே இல்லை. இந்த சவாலான பணியை ஒட்டுமொத்த படக்குழுவும் கூடுமானவரை சரியாக செய்து வெற்றிபெற்றிருக்கிறது.
 
ஸ்டைலான தோற்றத்தைவிட எளிய உடையில் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் பாத்திரத்திற்கு கார்த்தி சரியாக பொருந்துகிறார். ஆக்ஷன் காட்சிகளை தவிர்த்து, படம் நெடுகவும் வெகுளித்தனத்தையும், மகள் மீதான ஏக்கத்தையும் முக பாவத்தால் உணர்த்தி நெகிழச் செய்திருக்கிறார் கார்த்தி. நரேன் தனது பாத்திரத்தை மிகச்சிறப்பாக உள்வாங்கி குறையும், மிகையும் இல்லாமல் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களுக்கு பிறகு இதன்மூலம் நல்லதொரு அடையாளம் அவருக்கு கிடைத்திருக்கிறது. காமெடி வசனங்களில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் குணசித்திர கதாபாத்திரத்தில் தீனாவின் அப்பாவித்தனமான உடல்மொழி எடுபட்டிருக்கிறது. வில்லன்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் வழக்கமான சாயலை மீறவில்லை. எதிர்பார்க்காத இடத்தில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரமாக மாறும் ஜார்ஜ் மர்யன் சிறப்பாக செய்திருக்கிறார். அவரோடு கமிஷனர் அலுவலகத்தில் காதலனை இழந்து கதறும் பெண்ணின் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.
 
பாடல்கள் இல்லாத படமென்பதால் அதனை பயன்படுத்தி பின்னணி இசையில் சாம்.சி.எஸ் இன்னும் தன்னை நிரூபித்திருக்கலாம். டீஸர், ட்ரைலரில் வந்த தீம் இடம்பெற்ற பகுதி, கார்த்தியின் மகள் காட்சிகளை தவிர இசை பெரிதாக ஈர்க்கவில்லை. ஒரே இரவில் நடக்கும் கதையில் பார்வையாளர்களுக்கு எந்த அயர்ச்சியும் ஏற்படுத்தாத அளவுக்கு ஒளியமைத்திருக்கிறார் சத்யன் சூரியன். சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு வெளிப்பட்டிருக்கிறது.
 
கதாநாயக சாகசத்துக்காக லாஜிக் வரையறைகள் சற்று அதிகமாகவே மீறப்பட்டிருக்கிறது. காவல்துறையின் பலம் கமிஷனர் அலுவலகத்தையும், காவலர்களையும் பாதுகாத்துக்கொள்ளகூட முடியாத அளவிலா இருக்கிறது எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அதிகார வரம்பு எளியவர்களை பாதிப்பது தான் பெரும்பான்மையான நிதர்சனமாக இருக்கிறது. ஆனால், இந்த அமைப்பையே வேறுகோணத்தில் வைத்து கைதியின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். எனினும் இதுபோன்ற கேள்விகளுக்குள் போகாமல் சுவாரஸ்யமான திரைக்கதையின் அத்தனை அம்சங்களுடன் கூடிய படத்தை காண விரும்புபவர்களுக்கு கைதி நல்ல தீபாவளி பரிசு.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...