???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடலோரக் கவிதைகள்- அது காதலாகவே இருக்கிறது!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   05 , 2018  00:37:56 IST


Andhimazhai Image 

எத்தனையோ பெண்கள் இருக்கும் போது எனக்கு ஏன் ஜெஸ்ஸியை பிடித்திருந்தது? எவ்வளவு அடிப்படையான, ஆதாரமான கேள்வி இது.

எத்தனையோ காதல் கதைகள் இருக்கும் போது எனக்கு ஏன் வெண்ணிற இரவுகளின் மீது தீராத வியப்பும் வசீகரமும் இருக்கிறது? காதலை மையப்படுத்திய எத்தனையோ திரைப்படங்கள் இருக்கும் போது, ஜெனிபர் டீச்சரின் கண்ணீர் ஊடான புன்னகை எனக்கு ஏன் காதலின் ஆதாரமான காட்சியாக இருக்கிறது?

பிரேமம் போல, 96 போல பிரிந்த காதல்கள் ஏற்படுத்தும் வலியை இறுதியில் சேர்ந்துவிட்ட போதும் கடலோர கவிதைகளின் ஜெனிபர் டீச்சரும் சின்னப்பதாசும் எனக்குள் ஆழமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். காதலின் சுகம், அதன் வெற்றியில் மட்டுமோ... வலி அதன் தோல்வியில் மட்டுமோ... இல்லை. காதல் ஒரே நேரத்தில் சுகமாகவும் வலியாகவும் இருக்க கூடிய ஒரு உணர்வு. அது இரண்டையும் பார்வையாளருக்கு கடத்திய திரைப்படமாக கடலோரக் கவிதைகள் இருந்தது.

கொடியிலே பாடல் காட்சியில் கடலுக்குள் மூழ்கி காணாமல் போகும் தாஸ், மீனோடு நிற்பதை பார்த்து கண்ணீர் ஊடாக ஜெனிபர் டீச்சர் சிரிக்கும் காட்சிக்கு இணையானது, இறுதிக் காட்சியில் இருவரும் சேர்ந்திருப்பதை பார்த்து கங்கம்மா கண்ணீர் மல்க சிரித்துக்கொண்டு நிற்பது.

தமிழ் திரைப்படங்களில் வழி தவறிய ஆடுகளாக பெண்களும் நல் மேய்ப்பர்களாக ஆண்களும் பொதுவாக இருந்திருக்கிறார்கள். காதலை எந்த மொழியில் வழி தவறிய ஆடுகள் சொல்லும்? தமிழ் திரைப்படங்களில் பெண்களின் காதலுக்கு என்ன இடம் இருந்திருக்கிறது?

அதிலிருந்து சற்றே விலகிய படமாக கடலோரக் கவிதைகள் இருந்தது.

 வழி தவறிய ஆடாக சின்னப்ப தாஸ் அலைந்து கொண்டிருக்கும் போது அவனுக்கான மீட்சியை தேடித்தரும் நல் மெய்ப்பராக கங்கம்மா உருவெடுக்கிறாள். அவளுக்குள்ளும் காதல் இருக்கிறது. லாரன்சுக்கு ஜெனிபர் மீது இருந்த காதலை விட கங்கம்மாவுக்கு தாஸ் மீதிருந்த காதல் இன்னும் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கை கூடும் போது காதல் பலமாயிருக்கலாம். கை கூடும் வரையில் அது பலவீனம். ஊருக்குள் ரவுடியாக திரிந்து கொண்டிருந்த தாஸை காதலின் அவஸ்தை மனிதனாக்குகிறது. அவன் ஊருக்கு முன்பு அவமானப்படுத்தப்படுகிறான். அடி வாங்குகிறான். ஆனால் பொதுவாக தமிழ் படங்களில் நிகழ்வது போல அது காதல் மீதான வெறுப்பாகவோ பழிவாங்கும் உணர்வாகவோ மாறவில்லை. அது காதலாகவே இருக்கிறது.

நாஸ்டென்காவின் பெயரில்லாத காதலன் தொடங்கி ராமச்சந்திரன் வரையில் காதலின் அசலான தன்மையாக அதுதான் இருக்கிறது. எந்த நிலையிலும் அவர்களது காதல் அதன் தீவிரத்தன்மையையும் மென்மையையும் இழந்துவிடவில்லை. அவன் சமகாலத்து சினிமா காதலர்களிடமிருந்து சின்னப்பதாஸ் வேறுபட்டது, இந்த இடத்தில்தான்.  அவனிடத்தில் அசலான ஒரு காதல் இருந்தது. காதலுக்கேயுரிய நெகிழ்வுத்தன்மை இருந்தது.

தமிழ் சினிமாவில் காதலின் பொதுவான போக்குகளாக இருந்த சிலவற்றை கலைத்துப் போட்ட படமாக கடலோரக் கவிதைகள் இருந்ததில் எந்த வியப்பும் இல்லை.

அந்த படத்திலும் சில குறைகள் இருக்கதான் செய்தன, ஆனால் நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும் போது குறைகள் பெரிதாக தெரிவதில்லை.

 

-கவிதா முரளிதரன்

 

(அந்திமழை நவம்பர் 2018 இதழில் இருந்து)


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...