???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர்செல் சேவை நான்கு நாட்களுக்குள் சரியாகும்: தென்இந்திய தலைமை செயல் அதிகாரி 0 ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்க நடவடிக்கை தேவை: ராமதாஸ் 0 ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தில் இந்தியா! 0 தேவி'யை அடுத்து லட்சுமி' படத்தில் மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா! 0 இளையராஜா இசையில் பாடுகிறார் தனுஷ்! 0 காவிரி விவகாரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்: முதலமைச்சர் கோரிக்கை 0 மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில்! 0 ஆவடியில் சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை 0 இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா வெற்றி 0 தமிழக அரசின் மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 0 கமல்ஹாசனை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்- தினகரன் 0 ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முன்னாள் டிஜிபி ஆஜர் 0 துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி 0 தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கைது! 0 நீரவ் மோடியின் சொகுசு கார்கள் பறிமுதல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கபாலிடா - திரைவிமர்சனம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   23 , 2016  09:50:01 IST


Andhimazhai Image

 ‘நான் வந்துட்டேன்னு சொல்லு; திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’

 

என்று டீசரில் ரஜினி பேசிய வசனம், ரஜினி ரசிகர் அல்லாதவர்களுக்கும் ஒரு வித சிலிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கும்.

 

ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தொலைத்த தனது மனைவியையும் மகளையும் தேடித்திரியும் ஒரு மனிதனின் அவஸ்தையை வலியை மட்டுமே கபாலியின் முக்கால் பாகம் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறது.  

 

மெட்ராஸ் படத்தில் வடசென்னை மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசிய இயக்குநர் ப.ரஞ்சித், கபாலியில் மலேசிய வாழ் தமிழர்களின் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார்.

 

ராதிகா ஆப்தே சூப்பர் ஸ்டாருக்கு சரியான ஜோடிதான். முதற்பாதியில் அவ்வப்போது சின்னச் சின்ன ஷாட்டுகளில் மனதைத் தொடுகிறார். ரஜினியை பார்த்து ரொமான்ட்டிக் மூடில் அவர் பேசும் காட்சி கவிதை. செத்துவிட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த மனைவியை ரஜினி ரத்தமும் சதையுமாக நேருக்கு நேர் பார்க்கும் காட்சியில் ராதிகாவின் உணர்ச்சிகளைக் காட்டும் முகம் அவரது திறமைக்கு உதாரணம்.

 

ரஜினியை கோட்டு சூட்டில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்கள். மனைவியைக் காணப்போகும்போது வெண்ணிற தாடியை நீக்கிவிட்டு, இளமையாக படியில் இறங்கிவருகையில் அரங்கம் அதிர்கிறது.

 

ரஜினியின் மகளாக நடித்திருக்கும் தன்ஷிகாவுக்கு  சிறந்த வேடம். “மூஞ்சி இங்க இருக்கு..” என்று தனது அறிமுகக்காட்சியே அருமை. இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் இவருடைய கதாபாத்திரத்தின் உதவி தான் ரஜினிக்கே மிக துணையாய் இருக்கிறது.

 

அட்டகத்தி தினேஷ்க்கு நல்ல கதாபாத்திரம். படத்தில் அவர் வரும் காட்சிகளில் மட்டுமே புன்னகையை உருவாக்குகிறார். அவரது உடல் மொழி வித்தியாசமாக செதுக்கப்பட்டிருக்கிறது. பாட்டிலால் அடிவாங்கி உயிரைவிடும்போது நெஞ்சை உருக்குகிறார்.

 

மலேசியத் தமிழ் அடையாளங்களுடன் வந்திருக்கும் கபாலி, இதன் மூலம் தாய்த் தமிழகத்துக்கு மலேசியாவின் நிஜமுகத்தை அறிமுகம் செய்கிறது.

 

தமிழ்நேசனாக வரும் நாசர் சில நிமிடங்கள் தோன்றினாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

கலையரசன், ஜான் விஜய், லிங்கேஷ், கிஷோர் என்று ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

 

வில்லனாக வின்ஸ்டன் சா அமைதியான நடிப்பைக் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் பேசும் தமிழைத்தான் கேட்கமுடியவில்லை, அவர் பேசும்போது தமிழில் சப்டைட்டில் போட்டிருக்கலாம்.

 

ஒளிப்பதிவாளர் ஜி.முரளியின்  மலேசிய காட்சிகள் அனைத்தும் அத்தனை அழகு. சண்டை காட்சிகளில் கேமிராவின் பங்களிப்பும், படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீனின் உதவியும் இயக்குநருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.

 

மலேசியா செட்டுகளை கலை இயக்குநர் ராமலிங்கம் அவ்வளவு ரிச்சாகவும், அழகாகவும் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

 

சந்தோஷ் நாரயணனின் பின்னணி  இசை படம் முழுக்க அட்டகாசம். பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது.

 

படத்தின் இடையிடையே ரஞ்சித்தின் பேசும் மொழியான ஒடுக்கப்பட்டவர்களின் குரலும் பல இடங்களில் வசனமாக ஒலித்திருக்கிறது.

 

“பறவையோட குணாதிசயமே அது பறக்கறதுதான்டா… அதை பறக்க விடு…. வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணிக்கட்டும்…. உன்னோட இந்த கருணை அதோட சாவைவிட கொடுமையானது!!” 

 

 “காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட், சூட் போட்டதுக்கும்கூட ஒரு அரசியல் காரணம் இருக்கு.”

 

“சோத்துக்கே வழி இல்லாமல்தாண்டா இருந்தோம். ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, கண்ணை உறுத்துதுன்னா, ஆமாண்டா அப்படித்தான் போடுவோம், படிப்போம், முன்னேறுவோம்”

 

படத்தின் இறுதிக் காட்சி சூப்பர் ஸ்டாரின் படத்தில் எந்த இயக்குநரும் வைக்கத் துணியாதது. ரஞ்சித்தின் தைரியத்திற்கு பாராட்டுக்கள். இறுதியில் குண்டு யாருடைய துப்பாக்கியில் இருந்து வெடித்தது என்பதை பார்வையாளரின் முடிவுக்கே விட்டுவிட்டார் இயக்குநர். இது ஒருவேளை அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமாக இருக்குமோ.. என்னவோ..? 

 

ஒரு பரட்டை, ஒரு காளி, ஒரே கபாலி.. click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...