???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கபாலி கட்டணம் வசூல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   30 , 2016  23:44:16 IST

கபாலி திரைப்படத்துக்கு, அரசு நிர்ணயித்ததை விட, கூடுதல் கட்டணம் பெற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் கபாலி திரைப்படம் வெளியிடப்பட்ட பல திரையரங்கங்களில், அரசு நிர்ணயித்ததை விட 6 மடங்குக் கட்டணம் பெற்றதாகவும், இதன் மூலம் 250 கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் பணம் சுரண்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தடுக்கக் கோரி 31 மாவட்ட ஆட்சியர்களுக்கு இணையதளம் மூலம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, சிறிய திரையரங்கள் மட்டும் தான் அரசு அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியுமா? பெரிய திரையரங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே? கபாலி படத்தை அதிகாலை 3 மணிக்கே திரையிட அனுமதி வழங்கியது யார்? எனக் கேள்வி எழுப்பியதுடன், அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச டிக்கெட் கிடைப்பதால் விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்ர். அதிகக் கட்டணம் பெற்ற திரையரங்கங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...