???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர் 0 என்கவுண்டர்: அரவிந்த் கெஜ்ரிவால், மேனகா காந்தி கண்டனம் 0 விஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 13 0 மகளின் ஆத்மா சாந்தி அடையும்: ஐதராபாத் மருத்துவரின் தந்தை கருத்து 0 கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்: 66% வாக்குப்பதிவு 0 ‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி 0 இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 0 அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் தகுதிகள் தளர்வு! 0 ஐதராபாத் பெண் பாலியல் வன்கொடுமை: 4 பேரும் சுட்டுக்கொலை 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவியத்தலைவன்-விமர்சனம்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   02 , 2014  05:54:45 IST


Andhimazhai Image
 
  
    நாடகக்கலையின் முன்னோடி சங்கரதாஸ்சுவாமிகளின் சாயலில் நாசரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோரை நினைவு படுத்துகிற மாதிரி சித்தார்த், வேதிகா இருக்கின்றனர். 
    கதாநாயகர்களை நாடகமொழியில் சொல்வதானால் ராஜபார்ட் என்கிறார்கள். இந்தக்குழுவின் ராஜபார்ட்டாக இருக்கும் பொன்வண்ணன், தான் பெரியநடிகராகிவிட்டதால் சுவாமிக்குக் கட்டுப்படாமல் தன் விருப்பத்துக்கு நடக்கும் காரணத்தால் குழுவிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. 
    அடுத்த ராஜபார்ட் நாம்தான் என்று பிருத்விராஜ் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சித்தார்த்தை ராஜபார்ட் ஆக்குகிறார் நாசர். அதன்காரணமாக சிறுவயதிலிருந்து தன்னுடைய தம்பி போலப் பார்த்து வந்த சித்தார்த் மீது பொறாமை ஏற்படுகிறது பிருத்விராஜூக்கு. 
    தொடக்கத்தில் பெண்வேடமிட்டு நடிக்கும் -ஸ்திரிபார்ட்- பிருத்வியின் உடல்மொழி மிகச்சிறப்பு. முந்தையபடங்களைக் காட்டிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றாலும் நாடகக்கலைஞராகக் கொஞ்சம் குறைவாகவே தெரிகிறார் சித்தார்த். நாடகக்கலைஞர்கள் பற்றிய மரியாதைக்குரிய அடையாளத்தை ஏற்படுத்துகிற மாதிரியே நாசர், தம்பிராமய்யா, சிங்கம்புலி வேதிகா வேடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எல்லோருமே அதற்கேற்ப நடித்து வேடங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.  
    உள்ளூர் ஜமீனின் மகளாக நடித்திருக்கும் அனைகா மற்றும் நாடகக்கலைஞராக நடித்திருக்கும் வேதிகா ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்துப் பெருமைப்பட்டுக்கொள்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள். நடிப்புக்காகப் பல விருதுகளை வாங்கிய பிறகும் சித்தார்த்திடம் நான் நன்றாக நடிக்கிறேனா? என்று கேட்டுவிட்டுத் தவிப்புடன் காத்திருக்கும் இடத்தில் வரவேற்புப் பெறுகிறார் வேதிகா.
    நீ கரையேறிட்டா போதுமா? ஒத்திகையில் உன்னைப் பார்த்துத்தானே மற்றவங்க அதற்கேற்ப தங்களை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது உட்பட பல நுட்பமான விசயங்களைப் பேசுகிற நாசர், சித்தார்த்தின் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும்,
நாடகக்கலையின் அடுத்தகட்டம் அதுதான் என்பதை உணராமல் விடுதலைப்போராட்ட நாடகங்களை நடத்தும் சித்தார்த் மீது பிருத்வி கோபம் கொள்வதுமான காட்சிகள் முன்னோடிகள் மீதான மதிப்பைக் குறைக்கிற விதமாக இருக்கிறது.
    படத்தின் வசனங்களை நான்தான் எழுதியிருக்கிறேன் என்று அவ்வப்போது அறிவிக்கின்றன ஜெயமோகன் வசனங்கள்.
    ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்து காட்சிகளை மேம்படுத்தியிருக்கிறார். சித்தார்த் அனைகா சந்திக்கும் காட்சிகளில் கூடுதல் வெளிச்சம் இருப்பது எதனால் என்று தெரியவில்லை. 
    படத்தில் இடம்பெறுகிற சில பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தன் வழக்கத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
 
   
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...