???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'காப்பான்' பட விமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2019  02:08:51 IST


Andhimazhai Image
'அயன்', 'மாற்றான்' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சூர்யா – கே.வி. ஆனந்த் கூட்டணியில் வெளிவந்திருக்கிறது 'காப்பான்'. 'தானா சேர்ந்த கூட்டம்', 'என்.ஜி.கே' ஏற்படுத்திய விளைவால் ரசிகர்களின் பெரும் ஆராவாரத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கும் சூர்யா, இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவில் ரகசியமாக பணியாற்றுகிறார். இதற்கிடையில் இந்திய பிரதமர் மோகன் லாலை கொல்ல முயற்சி நடக்கிறது. பிரதமரின் லண்டன் பயணத்திலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு பணிகளுக்காக சூர்யா லண்டன் அனுப்பபடுகிறார். அங்கு தனது சகாக்கள் சமுத்திரக்கனி, பிரேம் குமார் உள்ளிட்டவர்களுடன் சாதுரியமாக செயல்படும் சூர்யா, பிரதமர் மோகன் லாலின் நம்பிக்கைக்குரியவராக மாறுகிறார். மோகன் லாலின் விருப்பத்தின்படி அவரது சிறப்பு பாதுகாப்பு குழுவில் (எஸ்.பி.ஜி) சூர்யா இணைக்கப்படுகிறார்.
 
இதன் பிறகும் தொடர்ந்து பிரதமரை கொல்ல முயற்சி, மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறிக்காக தஞ்சையில் விவசாயத்தை அழித்து, சுரங்கம் அமைக்க திட்டம் என கதையின் கனம் கூடுகிறது. பிறகு பிரதமரை கொல்லும் சதிவேலைகளை சூர்யா எதிர்கொள்கிறார். விவசாயத்தை அழித்து தாது பொருட்களை கொள்ளை அடிக்க துடிக்கும் கார்ப்பரேட் பயங்கரவாதத்தை உணர்கிறார். இதன்மூலம் பின்னப்பட்ட திரைக்கதையை திருப்பம், சஸ்பென்ஸ், காதல், ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கொண்டு சொல்லப்பட்டிருப்பதே காப்பான்.
 
பிரதமரின் ஊடக செயலாளராக வரும் சாயிஷா ஒருசில காட்சிகளில் சூர்யாவின் காதலியாக மாறுகிறார். அவர்களுக்கிடையிலான காதல் காட்சிகள் படத்தின் ஓட்டத்தில் அவ்வப்போது வந்து மறைகின்றன. பிரதமர் மோகன் லாலின் மகன் ஆர்யா, அழுத்தமான காட்சிகள் இன்றி முதற்பாதியில் குறும்புத்தனமான இளைஞராக திரிகிறார். படத்தில் அவருக்கு என்ன வேலை என்பதை இரண்டாம் பாதியில் சொல்லி சமன் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தொழிலதிபர் பொமன் இரானி, கார்ப்பரேட் நரித்தனங்களை உணர்த்தும் கதாபாத்திரம். வில்லனாக மிரட்டும் சிராக் ஜானி படத்தின் விறுவிறு காட்சிகளுக்கு அடித்தளம் போடுகிறார்.
 
ஆரம்பத்திலேயே மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளாதவராக காண்பிக்கப்படும் பிரதமர் மோகன்லால், நாட்டின் வளர்ச்சிக்காக சிந்திக்கிறார். ஆனால், தன்னை கொல்ல நடக்கும் முயற்சியையும், கார்ப்பரேட் முதலாளியின் திட்டங்களை அறிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.  
 
திரைக்கதையில் சுவாரஸ்யத்தின் வேகம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் லாஜிக் வரையறைகள் கமர்ஷியலாக மீறப்பட்டிருக்கின்றன. சாதாரணமாக வெடிகுண்டையும், துப்பாக்கியும் பயன்படுத்தி பிரதமரை கொல்ல வருபவர்கள்கூட சூர்யாவுடன் கையில் சண்டைப்போட்டுக் கொண்டிருப்பதை வேறென்ன சொல்வது? 
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையை பொறுத்தவரை அவருக்கு காப்பான் மிகப்பெரிய தோல்வி என்றே சொல்லலாம். பாடல்கள் – பின்னணி இசை இரண்டிலுமே பரவாயில்லை என்ற தரத்தில் கூட இசை இல்லை.
 
கார்ப்பரேட் முதலாளிகள் தமது லாபத்துக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள், பசுமையை அழித்தால்தால் விவசாயிகள் விரக்தியடைந்து நிலத்தைவிட்டு வெளியேறுவார்கள் என்பதற்காக விவசாயத்தை சிதைப்பார்கள், ஆட்சியாளர்களின் திட்டங்களை அவர்களின் முடிவுகள் தான் தீர்மானிக்கின்றன என்று அவர்களின் சுயரூபத்தை கமர்ஷியலாக இப்படம் சொல்லியிருக்கிறது. இந்த அளவில், விறுவிறுப்பான கதை மூலம் கார்ப்பரேட் அட்டூழியத்தை சொல்ல முயற்சிக்கும் படமாக காப்பானை பார்க்கலாம். இந்த விஷயத்தால் மட்டுமே காப்பான் சூர்யாவுக்குக் கை கொடுப்பான்!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...