???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்க பரிந்துரை 0 சபரிமலை நுழைவு போராட்டம் அறிவித்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய்! 0 அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு! 0 மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களை அகற்றுவது தான் ஒரே இலக்கு: மு.க.ஸ்டாலின் 0 ரபேல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! 0 தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு! 0 கஜா புயல்: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை 0 `கஜா' புயல் தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் 0 இலங்கையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! 0 இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கெளம்பு கெளம்பு கெளம்புடா: காலா பாடும் அரசியல்!

Posted : வியாழக்கிழமை,   மே   10 , 2018  02:26:45 IST


Andhimazhai Image
காலா படத்தின் பாடல்கள் ஓர் அட்டகாசமான விழாவில் வெளியாகி இருக்கின்றன. ரஜினி அரசியல் பேசாமல் ஒதுங்கினால் படத்தின் பாடல்கள் அப்படி இல்லை. உரத்த குரலில் அவை அரசியல் மட்டுமே பேசுகின்றன. அது கறுப்பர்களின் அரசியல்.
 
எப்படி இருக்கு காலா ஆல்பம்? 
 
ரஞ்சித் படங்களுக்கே உரிய அரசியல் தொனிக்கும் வரிகளுக்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பாக இசை அமைத்துள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். மும்பையில் நடக்கும் கதை என்பதால் இந்தி வரிகள், வட இந்திய இசைத்துணுக்குகள் என்று கலந்துஇருந்தாலும் பாடல்கள் காதுக்கு இனியவையாக இருக்கின்றன.
 
செம்ம வெய்ட்டு நம்ம காலா சேட்டு என்று ஆரம்பிக்கும் பாடல் பாப், ராப், ரெக்கே இசை வடிவங்களில் பலமுறை கேட்ட பாடல்களை நினைவூட்டுவதாக இருந்தாலும் சட்டென்று கேட்பவருக்குப் பிடித்துவிடுகிறது. கையை கட்டி வாயைப் பொத்தி நின்ன காலம் போச்சு எட்டி வந்து எண்ணத்தெல்லாம் வானத்திலே ஏத்தியாச்சு... போன்ற ஒடுக்கப்பட்டவர்களின் வரிகள் வந்து நெருப்பாக விழுந்துகொண்டே இருக்கின்றன. ஹரிஹர சுதன், சந்தோஷ் நாரயணன் குரலில் மேலும் சில ராப் பாடகர்களின் குரல்களுடன் காலா சேட் கலக்குறார் என்றுதான் சொல்லவேண்டும். 
 
இதே போன்ற பாட்டுதான் நிக்கல் நிக்கல் சல்தே ரே.... கெளம்பு கெளம்பு கெளம்புடா...! தாராவியில் நடக்கும் கதை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த வளர்ந்துவரும் டோப்பியாடெலிக்சிஸ் என்கிற நால்வர் கொண்ட பாப் பாடல் குழுவினருக்கு இயக்குநர் இந்த பாடலில் வாய்ப்பு அளித்துள்ளார். தமிழ் இந்தி மராத்தி என மூன்று மொழியையும் கலந்துகட்டி ராப் பாடிவருகிறவர்கள் இவர்கள். பாடுவதுடன் பாடல் வரிகளிலும் பங்களித்திருக்கிறார்கள் டோப்பியாடெலிக்ஸிஸ். தமிழ் நாட்டில் பல இடங்களில் நிக்கல் நிக்கல் சல்தே ரே ஒலிக்கும்.. இது அர்த்தம் அடுத்த வரியாக வரும் கெளம்பு கெளம்பு கெளம்புடா தான்!... பறை ஒலியின் பின்னணியில் வரும் இப்பாடலில் இருக்கிறது ரஞ்சித்தின் கூர்மையான அரசியல்.
இதே டோப்பியாடெலிக்ஸிஸ் பாடும் அடுத்த பாடல்:  “தெருவிளக்கு வெளிச்சத்தில நாங்க முன்னேறி வருவோம் உயரத்தில...”
 
சங்கர் மகாதேவன், ப்ரதீப் குமார், அனந்து மூவரின் குரல் ஒலிக்கும் ”வாடி என் தங்கச்சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல...” பாடல் அழகு. கொஞ்சம் பழைய பாடல்களை நினைவூட்டும் குழைவான குரலில் வரும் இந்த பாடல்  ஆரம்பத்தில் ”வாடி என் தமிழ்ச்செல்வி..  டேக் யு டு த ஷாப்பிங் நல்லி என்ற ரெமோ படப்பாடலை நினைவூட்டினாலும் அடுத்த வரியிலேயே வேறு பேட்டைக்குள் அட்டகாசமாக நுழைந்துவிடுகிறது.
 
ரஞ்சித்தின் பாடலாசிரியர் குழாமைச் சேர்ந்த உமாதேவியின் வரிகளில்  ப்ரதிப் குமார், தீ, அனந்து ஆகியோர் பாடும்  “கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா?’ அசலான காதல் வரிகளுடன் வரும் மெலடி. ஏ சண்டக்காரா ( இறுதிச்சுற்று படம்) பாடிய பாடகி தீ- யின் குரல் இப்பாடலிலும் உருக்கமாக ஒலிக்கிறது. ப்ரதிப்குமார் கண்ணம்மா என்று உருகுகிறார்.
 
 கற்றவை பற்றவை பாடலில் ’ஒத்த தலை ராவணா பத்துத்தலை ஆவுடா..’  என்று சந்தோஷ் நாராயணன் வீடு கட்டி அடிக்கிறார். உடனடியாக ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படப்போகும் பாடல் இதுதான்.
 
“ ஒத்தயில நிக்கற வேங்கடா. தில்லுருந்தா மொத்தமா வாங்கடா
எழுச்சிகளைப் புரட்சி ஆக்க வா
வரப்புகளை வயல்கள் ஆக்க வா
வறுமை எனும் நோயைத் தீர்க்க வா..”- இந்த பாட்டை விட சிறப்பான பாடல் ரஜினி ரசிகர்களுக்கு தலைவரின் அரசியல் வருகையைக் கொண்டாடக் கிடைக்கவே போவதில்லை.. ராப் ஸ்டைலில் வரும் இப்பாடலைப் பாடி இருப்பவர்கள் யோகி பி, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜாம் ராக் என்று போடுகிறார்கள். வரிகள் அருண்ராஜா காமராஜ், கபிலன், ரோஷன் ஜாம்ராக். இடையில் வரும் ஆங்கில வரிகளும் இதே ரகம்தான்.. இந்த மொத்தப் படத்திலும் கலக்கப்போவது இந்த பாடல்தான். பாடல் வெளியான வேகத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மெர்சலாகி, காலா பாடல்களால் அமைதி சீர்குலைந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று திருவாய் மலர்ந்ததற்கும் இந்த பாடலுக்கும் தொடர்பு இருக்கிறது.
 
  “உரிமையை மீட்போம்” என்ற பாடலுக்கும் ரஜினியின் அரசியல் மேடைகளில் ஒலிப்பதற்கான தகுதி இருக்கிறது! கவாலி பாணியில் தொடங்கி, துள்ளலான இசையில் நீண்டு செல்கிறது இப்பாடல். இதில்
“நிலமே எங்கள் உரிமை!” என்று சொல்வதில் உயர்கிறது தற்கால அரசியல் குரல்.
 
காலா பாடல்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளன. காலா சேட் வருகைக்காக காத்திருக்கலாம்!
 
 
-செல்வா
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...