???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவில் சர்வீஸ்- தேர்வான தமிழ் மாணவர்களுக்கு கி. வீரமணி வாழ்த்து அறிக்கை!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2020  08:09:16 IST

மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவ - மாணவிகள் 44 பேர் தேர் வாகியிருக்கிறார்கள் - அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் பதவிகளில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற 24 விதமான உயர் பதவிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 44 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களில் பலர் எளிய குடும்பங்களிலிருந்தும் தேர்வாகி உள்ளனர். தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார், தேசிய அளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். (இவரது அடிப்படையான படிப்பே, பிரபல கல்வி நிறுவனங்களிலிருந்தே இவரைத் தயாரித்திருக்கிறது - பி.டெக். படிப்பை கான்பூரிலும், எம்.பி.ஏ. படிப்பை அகமதாபாத்திலும் படித்துள்ளார்). மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரத்தைச் சேர்ந்த முருகேசன் - ஆவுடைதேவி இணையரின் மகள் செல்வி பூர்ணசுந்தரி. இவர் பார்வை மாற்றுத் திறனாளி. 5 வயதில் பார்வையை முழுமையாக இழந்தபோதிலும், தொடக்கக் கல்வி முதல் தன்னம்பிக்கையோடு பயின்று பட்டப் படிப்பை முடித்துள்ளார். மாற்றுத் திறனாளிக்குப் பாராட்டு! 2018 ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்த பூர்ணசுந்தரி, 4 ஆவது முறையாக 2019 இல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அதில் 286 ஆம் இடத்தில் வெற்றி பெற்று, அய்.ஏ.எஸ். ஆகியுள்ளார்! அதேபோல, சென்னை ஓட்டேரி புதிய வாழைமாநகரைச் சேர்ந்த பாலநாகேந்திரன் என்ற பார்வை மாற்றுத் திறனாளியும் வெற்றி பெற்றுள்ளார். இருவருக்கும் நமது தனி பாராட்டுகள் - வாழ்த்துகள்! ‘‘சிறு வயது முதலே எனக்கு என் தாய்தான் ஆசிரியர்; போட்டித் தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சென்றபோது அங்கு நண்பர்கள் செய்த பொருளாதார உதவிதான் என்னை வெற்றியாளராக உருவாக்கியது’’ என்று நன்றியுணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்! கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள்! அதேபோல், இவ்வாண்டு தமிழ்நாட்டின் வெற்றிப் பட்டியலில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் இடம்பிடித்து அம்மாவட்டத்திற்குத் தனிப் பெருமை சேர்த்துள்ளனர்! இதில் இருவர் மாநில அளவில் 2 ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதன் மகள் அய்ஸ்வர்யா, மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார்! தேசிய அளவில் 47 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்! தனது தாயார் இளவரசிதான் இந்த அளவுக்குத் தன்னை ஊக்கப்படுத்தி வெற்றி பெற வைத்தவர் என்றார். (இவரது தாயார் தமிழக அரசின் கல்வித் துறையில் பணிபுரிகிறவர்) அதுபோலவே, கடலூர் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டை மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசம் மகள் பிரியங்கா, தமிழக அளவில் 3 ஆம் இடத்தையும், தேசிய அளவில் 68 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்! (இவரது தாயார் பரிமளா - போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார்). பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் தேசிய அளவில் 514 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி! அதுபோலவே, திராவிடர் இயக்கத்தவர்களும் சரி, மற்ற பொதுத் தொண்டறத்தில் ஈடுபட்டவர்களும் சரி மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு செய்தி. அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி, டாக்டர் பரிமளத்தின் மகளின் மகள் ராணி, அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அறிய எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம். நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் அதுபோலவே, தமிழகத்தின் நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருதன்ஜெய் அய்.ஏ.எஸ். தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளார் என்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்! கடலூர் மாவட்டத்தில் மருங்கூர், பண்டரக்கோட்டை போன்ற கிராமப் பகுதிகளிலிருந்து அதுவும் நமது மகளிர் தேர்வாகி இருக்கிறார்கள் என்றால், அதற்கு மூலகாரணம், படிப்பை அனைவருக்கும் அளிக்காதீர் என்ற பிற்போக்குத்தனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டதுதான். கல்விப் புரட்சியின் விளைச்சல்! அதுமட்டுமா? அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பத்தாம்பசலித்தன மூடநம்பிக்கையை மாய்த்து திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசரும் நிகழ்த்திய கல்விப் புரட்சியின் விளைச்சல். இவை எல்லாவற்றிலும் முதன்மையானது ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்று எண்ணி தன்னம்பிக்கையுடன் உழைத்த - வெற்றிக் கனி பறித்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! மண்டல் கமிஷனின் விழுமிய பலன்! மண்டல் கமிஷன் அமலானதனால், விழுமிய பலன் ஏற்பட்டு, ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவ, மாணவிகள் சமூகநீதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது! மேலும் பல வெற்றிகளைக் குவிக்க, மக்கள் சமூக மேம்பாட்டிற்கு அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்களாக!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...